நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆய்வு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆய்வு</strong></p>
<p>சிதம்பரம், டிச. 28- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் சதீஷ் சந்திர துபே இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்தார். அமைச் சரை என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் தலைமை தாங்கிய அமைச்சர், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளா தார வளர்ச்சிக்கு என்எல்சி ஆற்றி வரும் பங்கினைப் பாராட்டினார். தொடர்ந்து, ‘நெய்வேலி நீர்’ ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் சுரங்க நீரைச் சுத்திகரித்து வணிக ரீதி யாகக் குறைந்த விலையில் வழங்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக் கவும் உதவும். இந்த ஆலை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும், புதுப்பிக்கப் ்பட்ட தொழிலாளர் உண வகத்தைத் திறந்து வைத்த அமைச்சர், தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்சார வாகன சார்ஜிங் மையத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். என்எல்சி தலை வர் பேசுகையில், மின் உற்பத்தித் திறனை அதிக ரிக்க ரூ.1,25,000 கோடி முத லீடு செய்யத் திட்டமிட்டுள் ளதாகவும், மத்திய அரசின் ஆதரவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித் துள்ளதாகவும் தெரிவித் தார்.</p>
