முந்தய பக்கம்

ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது போக்சோ வழக்குப் பதிவு!

9 May 2026, 4:29 pm
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது போக்சோ வழக்குப் பதிவு!
<p>தெலங்கானாவில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>தெலங்கானாவில், கடந்த டிசம்பர் 31 அன்று மொய்னாடா பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கரீம்நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து, பி.என்.எஸ் பிரிவு 74 – (பெண்மீது தாக்குதல்/அவமரியாதை), பி.என்.எஸ் பிரிவு 75 (பாலியல் தொந்தரவு), போக்சோ பிரிவு 11 &amp; 12 ஆகிய பிரிவுகளின் கீழ் பெட் பஷீராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram