தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலுவையில் இருக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நிர்ப்பந்திக்கும் ஒன்றிய அரசு

7 May 2026, 12:27 am
நிலுவையில் இருக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க  நிர்ப்பந்திக்கும் ஒன்றிய அரசு

நிலுவையில் இருக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நிர்ப்பந்திக்கும் ஒன்றிய அரசு

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் சென்னை, மே 6 - தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரம் முடிவதற்குள் பிஎம்ஸ்ரீ (PM SHRI) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கடிதம் அனுப்பி உள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ.

சம்சீர் அகமது ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ (PM SHRI) திட்டத் திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற அரசியல் நிபந்தனையுடன் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை தொடர்ந்து நிலுவை யில் வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கல்வி-அரசியல் பேரம் பேசும் கருவி அல்ல! சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.2,151 கோடி நிதியை தாமதப்படுத்தி, புதிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் பிஎம்ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை மாநிலத்தின் மீது திணிக்க முயற்சிப்பது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

கல்வி என்பது அரசியல் பேரம் பேசும் கருவி அல்ல; அது மாணவர்களின் அடிப்படை உரிமை. ஆனால் ஒன்றிய அரசு, கல்வி நிதியை ஒரு அர சியல் அழுத்த கருவியாக மாற்றி மாநிலங்களின் கொள்கை சுயாட்சியை பலவீனப்படுத்த முயற்சிக் கிறது.

குறிப்பாக தமிழ்நாடு தொடர்ந்து இரு மொழிக் கொள்கை, சமூகநீதி, இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வி போன்ற முன்னேற்ற அடிப்படை யிலான கல்வி கொள்கைகளை பாதுகாத்து வருவது ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி நேரடியாக இந்த நிதி தாமதத்தால் பாதிக்கப் படுகிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப் படும் நிதி மூலம் பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு, கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல்

, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ் அறை கள், நூலகங்கள், ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்திட்டங்கள், ஆசிரி யர் பயிற்சிகள், தற்காலிக ஆசிரியர் நியமனங் கள், பள்ளிவிடுப்பு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன.

இந்த நிதி நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே பல திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாக கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மேலும், அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட சமூக மாணவர்களே இந்த நிதி தாமதத்தால் அதிகமாக பாதிக்கப்படு கின்றனர்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு கிடைக்கும் வசதிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உறுதி செய்ய வேண்டிய சூழலில், கல்வி நிதியை மறுப்பது சமூக அநீதியை மேலும் தீவிரப்படுத்தும்.

கல்வியில் சமத்துவத்தை உருவாக்க வேண்டிய ஒன்றிய அரசு, மாறாக கல்வி வாய்ப்புகளில் பாகுபாட்டை உருவாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

PM SHRI திட்டம் என்பது வெறும் பள்ளி மேம் பாட்டு திட்டம் மட்டும் அல்ல; புதிய கல்விக் கொள் கையை மாநிலங்களில் கட்டாயப்படுத்தும் அர சியல் மற்றும் நிர்வாக கருவியாக அது பயன் படுத்தப்படுகிறது என்ற அச்சம் பல்வேறு கல்வி யாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே உள்ளது.

தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் மும்மொழிக் கொள்கை, மையப்படுத்தப் பட்ட பாடத்திட்ட அணுகுமுறை மற்றும் கல்வியின் தனியார்மயப்படுத்தல் போன்ற அம்சங்களை மறைமுகமாக திணிக்க முயற்சிக்கும் எந்த திட்டத் தையும் தமிழ்நாடு ஏற்கக் கூடாது.

மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்பது அவசியம் தமிழ்நாட்டில் அமைவிருக்கும் புதிய அரசு, எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்கா மல் மாநிலத்தின் கல்வி உரிமை மற்றும் மொழி உரிமையை உறுதியாக பாதுகாக்க வேண்டும்.

நிதிக்காக மாநிலத்தின் கொள்கை சுயாட்சியை விட்டுக்கொடுப்பது எதிர்கால தலைமுறைகளின் கல்வி உரிமையை பாதிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறிவிடும்.

தமிழகத்தின் நீண்டகால சமூகநீதி கல்வி பாரம்பரியத்தை பாதுகாப்பது புதிய அரசின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.

எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும்.

மாநில உரிமைகளை மீறும் வகை யில் கல்வியில் தலையிடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இல்லையெனில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களை ஒன்றி ணைத்து மாநிலம் முழுவதும் தீவிரமான போராட் டங்களை முன்னெடுக்க இந்திய மாணவர் சங்கத் தின் தமிழ்நாடு மாநிலக்குழு தயாராக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.