தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுபான்மையின மாணவர்கள்இடைநிற்றல் பற்றி தரவு இல்லைஒன்றிய அரசு பதில்; ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

5 Aug 2026, 9:17 pm
சிறுபான்மையின மாணவர்கள்இடைநிற்றல் பற்றி தரவு இல்லைஒன்றிய அரசு பதில்; ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

சிறுபான்மையின மாணவர்கள்இடைநிற்றல் பற்றி தரவு இல்லைஒன்றிய அரசு பதில்; ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

புதுதில்லி, ஆக. 5 -நாட்டின் பள்ளிக் கல்வி யில் சிறுபான்மையின மாண வர்களின் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் (Dropout)தொடர்பான மதவாரியான விவரங்கள் மற்றும் துல்லியமான தரவுகள் அரசிடம் பராமரிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பியவினாவுக்கு (நட்சத்திரக் கேள்வி எண்: 141), ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுஜூலை 29 அன்று பதிலளித்தார்.

சிறுபான்மையின மாணவர் சேர்க்கை; இடைநிற்றல் தரவுகள்

கடந்த ஐந்து கல்வியாண்டுகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையின மாணவர்களின் சேர்க்கை மற்றும் பள்ளி இடைநிற்றல் சதவீதங்களை மதவாரியாக அரசு வழங்கவேண்டும் என ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பள்ளிக் கல்விக்கான ‘யுடிஐஎஸ்இ+’ (UDISE+) தரவுத்தளத்தில் சிறுபான்மையின மாணவர் சேர்க்கை என்பது அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர், பார்சி, ஜெயின்) ஒட்டு மொத்தக் கூட்டாக மட்டுமே பராமரிக்கப்படுவ தாகவும், மதவாரியாகப் பிரித்துபராமரிக்கப்பட வில்லை என்றும் கூறினார். அதேபோல், பள்ளி இடைநிற்றல் வீதமும் ஒட்டுமொத்தப் பொதுஅளவிலேயே பதிவு செய்யப்படுகிறதே தவிர, சிறுபான்மையினச் சமூக வாரியாகவோ அல்லது மதவாரியாகவோ தனியாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் ஒப்புக்கொண்டார். ஒன்றிய அரசு சமர்ப்பித்த யுடிஐஎஸ்இ+தரவுகளின்படி, பள்ளிச் சேர்க்கை விவரங்கள்:

• தொடக்கக் கல்வி (Primary - 2025-26): மொத்த சேர்க்கை 10.19 கோடியில், சிறுபான்மையின மாணவர்கள் 2.21கோடி (21.8%).

• நடுநிலைக் கல்வி (Upper Primary - 2025-26): மொத்த சேர்க்கை 6.32 கோடியில், சிறுபான்மையின மாணவர்கள் 1.23 கோடி (19.6%).

•உயர்நிலைக் கல்வி (Secondary - 2025-26): மொத்த சேர்க்கை 3.82 கோடியில், சிறுபான்மையின மாணவர்கள் 71.49 லட்சம் (18.7%).

• மேல்நிலைக் கல்வி (Higher Secondary - 2025-26): மொத்த சேர்க்கை 2.88 கோடியில், சிறுபான்மையின மாணவர்கள் 49.23 லட்சம் (17.1%).

உயர்கல்வியைப் பொறுத்தவரை ‘ஏஐஎஸ்ஹெச்இ’ (AISHE) கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 2023-24 கல்வியாண்டில் மொத்தஉயர்கல்வி சேர்க்கையான 4.50 கோடியில், முஸ்லிம் மாணவர்கள் 22.52 லட்சமும் (பெண்கள் 11.65 லட்சம்), இதர சிறுபான்மையின மாணவர்கள் 10.79 லட்சமும் (பெண்கள் 5.71 லட்சம்) சேர்ந்துள்ளனர். உயர்கல்வியில் மாணவர்கள் பாடப்பிரிவு களை மாற்றுவதால் அதில்‘இடைநிற்றல்’ என்ற கோட்பாடு இல்லை எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.

ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலை சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி தனது விமர்சனத்தைப் பதிவுசெய்துள்ளார்.சிறுபான்மையின சமூகங்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறும் ஒன்றிய அரசு, அந்த மாணவர்களின் இடைநிற்றல் குறித்த மதவாரியான அடிப்படைத் தரவுகளைக்கூடப் பராமரிக்காமல் இருப்பது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். துல்லியமானதரவுகள் இல்லாதபோது திட்டங்களின் பயன் உரிய மாணவர்களை சென்றடைகிறதா என்பதைஎப்படி மதிப்பிட முடியும் என்றும் கேள்விஎழுப்பினார்.

தொடக்கக் கல்வியில் 21.8 சதவீதமாக இருக்கும் சிறுபான்மையின மாணவர்சேர்க்கை, மேல்நிலைக் கல்விக்குச் செல்லும்போது 17.1 சதவீதமாகக் குறைவதையும் தரவுகள் வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வெறும்ஒட்டுமொத்த எண்களைக் கணக்குக் காட்டாமல், சிறுபான்மையின மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க மதவாரியான துல்லியமான தரவுகளைச்சேகரித்து, கல்வி உதவித்தொகைகளை தடையின்றி வழங்கி அவர்களின் உயர்கல்வியை உறுதி செய்ய ஒன்றியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.