தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாநில மொழி அறிவு கட்டாயம்! சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை வெற்றி!

22 May 2026, 8:34 pm
ஒன்றிய அரசுப் பணிகளுக்கு  மாநில மொழி அறிவு கட்டாயம்! சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை வெற்றி!

ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாநில மொழி அறிவு கட்டாயம்! சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை வெற்றி!

மதுரை, மே 22 - ஒன்றிய அரசுப் பணிகளில், மாநில மொழி அறிவு, அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள தாகவும், இது நீண்டகாலக் கோரி க்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தமது அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதி யாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணைய (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

இது நமது தொடர் கோரிக்கைக்கு கிடைத்த பெரும் வெற்றி! தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! பாதிக்கப் பட்டு வந்த அலுவலக சேவைகள் ஒன்றிய அரசுப் பணிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நியமனங்களை பெறுவது, அலு வலக சேவை களை நிறை வேற்றுவதில் பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தி வந்தது.

எனவே, மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்றும், மாநில மொழி அறிவு கொண்டவர்கள் பணி நியமனங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய வகை யில் கல்வித் தகுதி உள்ளிட்ட நிபந்த னைகள் இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்துள்ளேன்.

மாநிலங்களிலேயே பணி நியமன வாய்ப்பு தற்போது ஒன்றிய அரசின் பணியா ளர் தேர்வாணையம் (Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions, Depar tment of Personnel and Training, Staff Selection Commission) 21.05.2026 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கையில் உத வித் தணிக்கை அலுவலர் (மாநிலப் பதவி), உதவி கணக்கு அலுவலர் (மாநி லப் பதவி) ஆகிய பணிகளுக்கு மாநில மொழி அறிவு தேவையென்றும், அதற்கு 10-ஆம் வகுப்புமட்டத்திலான அரசு தேர்வு ஆணையங்கள் வழங்கியுள்ள சான்றிதழ்கள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே பணி நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழியர் அமைப்புக்கள் பாராட்டுக்கு உரியவை எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது.

இது குறிப்பிடத்தக்க வெற்றி. ஒன்றிய அரசின் இதர பணி களுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்தப் பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்திய அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்கள், வருமான வரித்துறை ஊழியர் சங்கம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்ட அமைப்பு களுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.