தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரானை அமெரிக்கா தாக்கும் அபாயம் இந்தியர்களை அழைத்துவர ஒன்றிய அரசு திட்டம்

16 Jan 2026, 3:00 pm
ஈரானை அமெரிக்கா தாக்கும் அபாயம்  இந்தியர்களை அழைத்துவர ஒன்றிய அரசு திட்டம்
<p><strong>ஈரானை அமெரிக்கா தாக்கும் அபாயம் &nbsp;இந்தியர்களை அழைத்துவர ஒன்றிய அரசு திட்டம்</strong></p> <p>டெஹரான்,ஜன.16- ஈரானில் உள்நாட்டுச் சூழல் மோச மடைந்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியக் குடிமக்களைப் வெளியேற்ற இந்தியா தயாராகி வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. &nbsp;அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் மிக மோசமான பொரு ளாதார நெருக்கடியில் உள்ள ஈரானில் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலைப் பயன் படுத்தி அந்நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருகின்றன. &nbsp;டிரம்ப் நேரடியாக அந்நாட்டு மக்களி டம் அமைப்புகளை கைப்பற்றுங்கள்; &nbsp;உங்களுக்கான உதவி வந்து கொண்டுள் ளது என ஆட்சிக்கவிழ்ப்புக்கு தூண்டு தல் &nbsp;விடுத்துள்ளார். மேலும் மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் அமைந்துள்ள அல்-உதெய்த் என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத்தலத்தில் இருந்து முக்கிய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேறக் கூறியுள்ளது. &nbsp;இந்த நகர்வுகள் எப்போது வேண்டு மானாலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்நேரம் வேண்டுமென்றாலும் ஈரான் மீது போர் தொடுக்கலாம் என்ற அச் சத்தை உருவாகியுள்ளது. &nbsp;இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் &nbsp;வெளியுற வுத் &nbsp;துறை &nbsp;அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, &nbsp;அந்நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்திற்கான பணிகள் தொடங்கிய தாகவும் கூறப்படுகிறது. &nbsp;ஈரானில் உள்ள &nbsp;இந்தியத் தூதரக மும் அங்குள்ள இந்தியர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ள தாகத் தெரிவித்துள்ளன. மாணவர்கள், பயணிகள், வணிகத்துறை நிபுணர்கள் என &nbsp;10,000 க்கும் மேற்பட்ட இந்தியர் கள் ஈரானில் உள்ளனர். &nbsp;ஈரான் ராணுவமும் காவல்துறை யும் உள்நாட்டுச் சூழலை கட்டுக்குள் வைத்திருப்பத்திலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியர்க ளை பாதுகாப்பாக வெளியேற்றுவது கடினமான காரியமாக மாறியுள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். &nbsp;ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய &nbsp;தூதரகம் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளது. +989128109115, +989128109 109, +989128109102, +989932179 359 மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.