மோட்டார் தொழிலை சீரழிக்கும் ஒன்றிய அரசு: சிஐடியு ஆர்ப்பாட்டம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>இரு மொழி கல்வெட்டு கண்டெடுப்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.24- பாப்பாரப்பட்டி அருகே தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி கல் வெட்டு கண்டெடுக்கப்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப் பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் கல் வெட்டு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மலையூர் அருகே வாரக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ள கல்வெட்டை கண்டுபிடித்த னர். அந்த கல்வெட்டு 19 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. அதேபோல, அக்கல் வெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிக ளில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரும், அந்தப் பகுதியின் மூன்று ஊரின் பெயர்களும் குறிப் பிட்டிருப்பது தெரியவந்தது. தெலுங்கு மொழியில் ஆலம் பாடி என்றுள்ள ஊர் பெயரே தற்போது ஆலமரத்துக் கொட் டாய் என்ற மாறியிருக்கலாம். அதேபோல, தற்போதுள்ள பிக் கிலி மற்றும் பெரியூர் ஆகிய ஊர்களின் பெயரும், ஆலம் பாடி நுழைவு வாயில் என்கிற பெயரும் தெலுங்கு மொழி யில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித் துள்ளனர்.</p>
