தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாகித்ய அகாடமியில் ஒன்றிய அரசு தலையீடு படைப்பாளிகள், கலைஞர்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் : பெ. சண்முகம்

30 Dec 2025, 4:07 pm
சாகித்ய அகாடமியில் ஒன்றிய அரசு தலையீடு படைப்பாளிகள், கலைஞர்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் : பெ. சண்முகம்
<p><strong>சாகித்ய அகாடமியில் ஒன்றிய அரசு தலையீடு படைப்பாளிகள், கலைஞர்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் : பெ. சண்முகம்</strong></p> <p>சென்னை, டிச. 30 - சாகித்ய அகாடமி விருது தேர்வில் ஒன்றிய அர சின் தலையீட்டிற்கு எதிராக படைப்பாளிகள், கலைஞர் கள் காத்திரமான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் வேண்டுகோள் விடுத்தார். தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் கி. அன் பரசன் ரிசர்வ் வங்கி ஊழிய ராக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலக பணி &nbsp;நிறைவு பாராட்டு விழா மற்றும் &lsquo;ஈரம்&rsquo; நூல் வெளியீட்டு விழா &nbsp;ஞாயிறன்று (டிச.28) கே.கே. நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு பெ. சண்முகம் பேசியதாவது: மார்க்சிய இயக்கத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் பல கலை படைப் பாளிகளை வழங்கியது. கருப்பு கருணா, பவா செல்ல துரை, பல்லவன் வரிசையில் வளர்ந்து தமுஎகச-வின் மாநிலத் தலைவராக கி. அன்பரசன் உயர்ந்துள்ளார். வங்கிப் பணியோடு இயக்கத்திற்காக நேரம் ஒதுக்கிப் பணியாற்றி வந்த அன்பரசன், இனி கூடுதலாக செயலாற்றுவார். சிறந்த ஊழியர் முழுநேரப் பணிக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னாட்சி அமைப்பு களை ஒன்றிய பாஜக அரசு &nbsp;தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தாம் &nbsp;விரும்புகிறபடி இயக்கு கிறது. தற்போது சாகித்ய அகாடமியையும் தனது கட்டு ப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சாகித்ய அகாடமியின் தேர்வுக்குழு டிசம்பர் 18 அன்று கூடி அனைத்து மொழி களுக்குமான சிறந்த படைப்பாளிகளை தேர்வு செய்து, விருதாளர்களை அறிவிக்க இருந்தபோது, ஒன்றிய அரசின் கலாச் சாரத்துறை அமைச்சகம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இது வன்மையான கண்டனத் திற்கு உரியது. ஒரு அமைப்பின் தன்னா ட்சி அதிகாரத்தில் தலையிடு வது ஏற்க முடியாது. இதற் கெதிராக எழுத்தாளர், கலை ஞர்களிடமிருந்து காத்திர மான எதிர்ப்பு போதுமான அளவிற்கு வராதது வருத்த மளிக்கிறது. சீரமைக் கிறோம் என்ற பெயரில் &nbsp;தாங்கள் சொல்கிறவர் களைத் த்தான் தேர்வு செய்ய &nbsp;வேண்டும் என்கிறது. எழுத்தாளர்களின் சுதந்திரத் தில் ஆட்சியாளர்கள் தலை யிடுகிறார்கள்; அச்சுறுத்து கிறார்கள். இதனை ஏற்க &nbsp;முடியாது. ஆட்சியாளர் களின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக வலுமிக்க கண்ட னக் குரலை எழுப்பவேண் டும். அதற்கு தமுஎகச முன் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் பேசினார். நிகழ்விற்கு அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழி யர் சங்க செயலாளர் டி.ஜான்சன் தலைமை தாங்கி னார். அதிகாரிகள் சங்க துணைத்தலைவர் வி. ராமச்சந்திரன், தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ., நாடகவியலாளர் பிரளயன், &lsquo;பெபி&rsquo; மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவிக்குமார், இயக்குநர்கள் சை. கவுதமராஜ், கீரா. கலை மாமணி சுதா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.