மறைமுக நடவடிக்கைகள் மூலம் ரயில் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு
26 Dec 2025, 3:44 pm
<p><strong>மறைமுக நடவடிக்கைகள் மூலம் ரயில் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு</strong></p>
<p>சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் மதுரை, டிச.26 - மறைமுக நடவ டிக்கைகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தி வரு கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரயில் பயணத்தை தவித்துள்ளனர். இந்நிலை யில், மீண்டும் கட்டண உயர்வு என்பது நியாயமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மோடி அரசு ரயில் கட்டணங் களை உயர்த்தி உள்ளது. 2014-க்கு பிறகு இப்போது தான் கட்டணத்தை உயர்த்துவதாகவும், இது ஒன்றும் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் படிப்படியாக கட்டணங்களை உயர்த்தினால் பிரச்சனை இல்லை என்று கருதுகிறார்கள். உண்மையில் ரயில்வேயில் கட்டண உயர்வே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நடப்பது என்ன? கட்டண உயர்வு பல மறைமுக நடவ டிக்கைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பானது உதாரணமாக சிறப்பு ரயில் சிறப்பு கட்டணம், தட்கல், தட்கல் பிரிமியம் பயண ரத்து கட்டணம் போன்ற வகை களில் கட்டணங்களை விமான கட்டண அளவுக்கு உயர்த்தி உள்ளார்கள். வந்தே பாரத் போன்ற வண்டிகளில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த் தப்பட்டுள்ளது. அப்படி இருக்க கட்டண உயர்வே இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. சாலைக்கு துரத்தப்பட்ட மக்கள் இவற்றின் காரணமாக 2014-15-க்கு பிறகு 2023-24 காலக் கட்டத்தில் 132 கோடி பயணிகள் ஓர் ஆண்டு பய ணத்தை தவிர்த்துள்ளார்கள். அவர் களை மோடி அரசு சாலைக்கு துரத்தி யுள்ளது. 2014-15 இல் 822 கோடி பயணி கள் பயணம் செய்தார்கள். 2023-24இல் 690 கோடியாக அது குறைந்துவிட்டது. இது கட்டண உயர்வின் மூலமாகத் தான். மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலமாக 6 கோடி மூத்த குடிமக்கள் பய ணத்தை தவிர்த்து உள்ளனர். இப்படி எல்லோரையும் மோடி அரசு தேச நல னுக்கு விரோதமாக, விபத்துக்கள் நிறைந்த, மாசு நிறைந்த சாலைக்கு துரத்தி உள்ளது. சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்கள் 4702 வண்டிகள் 2014-15 இல் இயக்கப்பட்டன. அதுவே 2023- 24இல் 3313 ஆக குறைந்துவிட்டது. அதாவது 1389 சாதாரண வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதாரண மக்கள் சாலைக்கு துரத்தப்பட்டுள்ளனர். இப்படி மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பயணிகளை ரயிலில் இருந்து சாலைக்கு துரத்திவிட்டு மீண்டும் கட்டணத்தை உயர்த்துவதில் நியாயம் இல்லை. அது மட்டுமல்ல, பயணிகள் குறைந்தாலும் வருமானம் அதிகரித்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். வருமானம் 2014-15 இல் ரூ.42,189 கோடியாக இருந்தது; 2023-24இல் ரூ.70,693 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் அர்த்தம் குறைந்த பயணி களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது என்பதுதான். எனவே இந்த கட்டண உயர்வு நியாயமற்றது. இது கைவிடப்பட வேண்டுமென தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
