சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசு! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசு! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 15- சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலையேற்றத்தை கண்டித்து தமிழ் நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வளைகுடா பகுதிகளில் நிலவும் போர் காரணமாக, இந்தியா முழுவதும் சமையல் எரியாவு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இப்பிரச்சனை சம்பந்த மாக ஒன்றிய பாஜக கூட்டணி அரசு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுப்பதற்கு பதிலாக, போர் நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு, காளை மாட்டுச் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்டோர் கண்டனவுரையாற்றினர். இதேபோன்று, மரப்பாலம் பகுதியில் திமுக நிர்வாகி குறிஞ்சி தண்டபாணி, மொடக்குறிச்சி வட்டம், விளக்கேத்தி பகுதியில் ஒன்றியச் செயலாளர் குண சேகரன், கோபியில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜய ராகவன், எஸ்.வி.மாரிமுத்து, நகரச் செயலாளர் வி.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நம்பி யூர், கொளப்பலூர், டி.என்.பாளையம், பொலவக்காலிபாளையம், குள்ளம் பாளையம் என மாவட்டம் முழுவதும் 31 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. திருப்பூர் திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, திமுக மத்திய மாவட்டச் செயலா ளர் க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எஸ்டிபிஐ இதயத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி ஹைதர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சி ராயல் ராஜா, மக்கள் நீதி மய்யம் மகேந்திரன், கொமதேக சந் தோஷ், முஸ்லிம் லீக் மாவட்டத் தலை வர் சையது முஸ்தபா, கொங்கு இளை ஞர் பேரவை தலைவர் உ.தனியரசு உள் ளிட்டோர் பேசினர். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், விசிக மண்டலச் செயலா ளர் தமிழ்வேந்தன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கோபால்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலையில் பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வ ரசாமி, மடத்துக்குளத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், குடிமங்கலத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அவிநாசியில் தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், சேவூர், புதிய பேருந்து நிலையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, சிவப்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ர மணி தலைமை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் தங்கமணி, நகரச் செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், ஒன்றியச் செயலாளர் காவேரி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், தேமுதிக தலைமை நிலைய செயலா ளர் இளங்கோவன், விசிக மாவட்டச் செயலாளர் பாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அரூரில் நகராட்சி துணைத்தலைவர் சூர்யா தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திமுக நகர செயலாளர் முல்லை ரவி வரவேற்றார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், விசிக மாவட்டச் செயலாளர் சி.கே.சாக் கன்சர்மா, திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், விசிக மண்டலச் செய லாளர் கி.ஜானகிராமன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் செ.கிருஷ்ண குமார், மஜக மாவட்டத் தலைவர் இம் ரான், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, சி.தென்னரசு, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் குமார், காங்கிரஸ் வட்டார தலை வர் வஜ்ஜிரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி., பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச் சுனன், வி.மாதன், ஒன்றியச் செயலாளர் கள் எஸ்.எஸ்.சின்னராஜ், ஆ.ஜீவானந் தம், திமுக ஒன்றியச் செயலாளர் ஏ.சண் முகம், வர்த்தகரணி மாநில துணைச் செயலாளர் தர்மசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்த கூடலூர் நக ராட்சி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, திமுக துணை பொதுச்செய லாளர் ஆ.ராசா எம்.பி., தலைமை வகித் தார். கோவை வடக்கு மாவட்டச் செய லாளர் ரவி, கூடலூர் நகராட்சி தலை வர் அறிவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி கள், காங்கிரஸ், விசிக, தேமுதிக, மதி முக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.</p>
