தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் இழிவான அரசியலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

28 May 2026, 11:11 pm
ஒன்றிய அரசின் இழிவான அரசியலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இழிவான அரசியலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து வியாழனன்று (மே 28) சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், மூத்த தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், எம்.வி.கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், எஸ்.மனோன்மணி, வெ.ரவீந்திர பாரதி, ஆர்.அருள்குமார், பி.கே.மூர்த்தி, பகுதிச் செயலாளர்கள் கே.மகேந்திரவர்மன் (அண்ணாநகர்), ஆர்.கபாலி (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி), சி.மார்ட்டின் (வில்லிவாக்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆவடி, அம்பத்தூர் சிபிஎம் பகுதிக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர் எம்.ராபர்ட்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், மாமன்ற உறுப்பினர் அ.ஜான், நிர்வாகிகள் ஆர்.ராஜன், நடராஜன், ராமமூர்த்தி, சடையன், சு.பால்சாமி, ஜெ.ரவி, பகவதி, கே.எம்.தியாகராஜன், கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மறைமலைநகர், சோத்துப்பாக்கம், வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி மாசிலாமணி தலைமையில் வட்டச் செயலாளர் எஸ். ராஜா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் மாநில குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் நகர செயலாளர் டி.ஸ்ரீதர் வட்ட செயலாளர் பழனி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ஒன்றிய அமலாக்கத்துறை மற்றும் பாஜக அரசை கண்டித்து திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் தாலுகா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிபிஎம் நிர்வாகிகள் கேசவன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன், காசி, ஜோதி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர் பா.ஹேமா, நிர்வாகிகள் ஆர்.இளங்கோவன், கோபி, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன், நிர்வாகிகள் பா.தேவி, முருகேசன், கிருஷ்ணன், ராஜலட்சுமி, வினோத், இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.