உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!
6 May 2026, 1:39 pm

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை நிர்வகிக்கும் 1956-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தும் '2026-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதாவை கொண்டுவர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 26-லிருந்து 31-ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், 2019-ஆம் ஆண்டு வரை அந்த கூடுதல் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. கடைசியாக 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-லிருந்து 34-ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.