தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026 ஒன்றிய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் பார்வையில்...

1 Feb 2026, 3:51 pm
2026 ஒன்றிய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் பார்வையில்...

2026 ஒன்றிய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் பார்வையில்...

எதார்த்தங்களை  உணர மறுக்கும் பட்ஜெட்

வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தித் துறை வீழ்ச்சி மற்றும் விவசாயிகளின் துயரத்தை இந்த  பட்ஜெட் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. முதலீட்டா ளர்கள் வெளியேறுவதும், குடும்பச் சேமிப்பு குறைவதும் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நெருக்கடி கள். இவற்றைச் சீரமைக்கத் தவறிய மோடி அரசு, இந்தி யாவின் எதார்த்த நிலையை உணர மறுக்கும் பார்வை யற்ற தன்மையுடன் இந்த பட்ஜெட்டைத் தயாரித்துள்ளது. ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

புதிய சிந்தனைகள் அற்ற  வெற்று அறிக்கை

ஒன்றிய மோடி அரசிடம் தேசத்தை முன்னெடுத்துச் செல்லப் புதிய யோசனைகள் எதுவும் இல்லை என்பதற்கு இந்த பட்ஜெட்டே சாட்சி. இந்தியாவின் சமூக,  பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு இதில்  விடையில்லை. ஏழைகளை வஞ்சிக்கும் இந்த பட்ஜெட்,  கார்ப்பரேட்களுக்கானது. சமானிய மக்களின் வலியைப்  போக்கத் தவறியதால் இதில் சாமானியர்களுக்கு ஏது மில்லை. மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

வங்காளத்திற்கு  இழைக்கப்பட்ட அநீதி

ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் ‘மேற்கு  வங்கம்’ என்ற சொல்லே இடம் பெறாதது அதிர்ச்சி யளிக்கிறது. இது வங்காள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாநிலத்தைப் புறக்கணிப்பதன் மூலம் ஒன்றிய  அரசு வங்காளிகளை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடத்துகிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் இப்போக்கை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அபிஷேக் பானர்ஜி, பொதுச் செயலாளர், திரிணாமுல் காங்கிரஸ்

புரியாத புதிராக இருக்கும் பட்ஜெட்

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவை களைப் பட்ஜெட் சிதைத்துவிட்டது. ‘வளர்ந்த இந்தியா’ கனவு பேசும் அரசு, கல்விக்கான நிதியை  உயர்த்தாதது ஏன்? தங்கம் விலை உயர்வு குறித்து மௌனம் காப்பது ஏழைப் பெண்களைப் பாதிக்கும். நகை  செய்ய இரும்பு மீது பித்தளை பூசும் நிலையைத்தான் இந்த பட்ஜெட் உருவாக்கும். இது ஒரு புரியாத புதிர். அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி கட்சி

வெற்று வார்த்தைகளின் அலங்காரம்

கட்டமைப்பு நெருக்கடிகளைத் தீர்க்காமல் வெறும் ஆடம்பரமான வார்த்தைகளை மட்டுமே இந்த பட்ஜெட் நம்பியுள்ளது. அலங்காரமான அறிவிப்புகள் செய்திகளில் தலைப்பாக மாறலாமே தவிர, சாமானிய மக்களின் வறுமையை மாற்றாது. பொருளாதார எதார்த்தத்திலிருந்து விலகி, மேலோட்டமான கவர்ச்சித்  திட்டங்களால் தேசத்தின் கவலைகளை மறைக்க முயல்கிறது மோடி அரசு. மனோஜ் ஜா, மூத்த தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளம்

காற்றில் பறந்த வேலைவாய்ப்பு உறுதிமொழி

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி யை மோடி அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. விவ சாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், கருப்புப் பணத்தை மீட்போம் போன்ற முழக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. பொருளாதார அமைப்பையே சீர்குலைத்துள்ள இந்த அரசு, இளை ஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கான தீர்வுகள் இல்லை. சஞ்சய் சிங், மூத்த தலைவர், ஆம் ஆத்மி கட்சி

கேரளாவுக்கு நேரடியான பாகுபாடு

கேரளத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளும், அதி வேக ரயில் திட்ட விண்ணப்பங்களும் நிரா கரிக்கப்பட்டுள்ளன. வரி வருவாயில் 50% பகிர்வு வழங்கப்  பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு  ஏற்கவில்லை. மாநிலங்களின் கனிம வள உரிமை களைப் பறிக்க முயலும் ஒன்றிய அரசின் செயல்திட்டம்  கண்டிக்கத்தக்கது. கேரளாவுக்கு இழைக்கப்பட்ட இந்த  நேரடி பாகுபாட்டை அரசு தீவிரமாக ஆய்வு செய்யும். பி.ராஜீவ், தொழில்துறை அமைச்சர், கேரள அரசு

கனிம வேட்டையில் கவனம் காட்டும் அரசு

மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு என்பது பெரும் ஏமாற்றம். குறிப்பாகத் தமிழகத்திற்கு எந்த உருப்  படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தி லிருந்து அரிய வகை கனிமங்களை மட்டும் வெட்டி யெடுக்க விரும்பும் ஒன்றிய அரசு, மாநில வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டும்  கூடத் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்றக் குழுத் தலைவர், திமுக

வஞ்சிப்பதில் பாஜகவின் பிடிவாதம்

தேர்தல் காலத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் பாஜக அரசு பிடிவாதமாக உள்ளது. மாநிலங்களுக்  கான நிதிப் பகிர்வில் 16-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை ஏமாற்றமளிக்கிறது. விலைவாசி உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிய  இந்த பட்ஜெட், பொருளாதாரத்தை மேலும் பாதாளத்  திற்கே தள்ளும். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொல்.திருமாவளவன், தலைவர், விசிக

யானைப் பசிக்குச் சோளப்பொரி

ரயில்வே மற்றும் மின்னணு திட்டங்கள் சிலவற்றை வரவேற்றாலும், தமிழக நதிநீர் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் சுமையைக் குறைக்காத இந்த பட்ஜெட், யானைப் பசிக்குச் சோளப்  பொரி வழங்கியது போல் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.