தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் ஈரப்பதம் 22% என உயர்த்தாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு ! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

24 Nov 2025, 3:26 pm
நெல் ஈரப்பதம் 22% என உயர்த்தாமல்  டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு ! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>நெல் ஈரப்பதம் 22% என உயர்த்தாமல்&nbsp; டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு ! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்&nbsp;</strong></p> <p>திருவாரூர், நவ.24- &nbsp;கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணம் அளிக்காமலும், நெல் கொள்முதலில் 22 சதவீதம் ஈரப்பத அளவை உயர்த்தி &nbsp;வழங்காமல் டெல்டா விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். சிபிஐ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கோரிக்கை விளக்கி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ். கேசவராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம். துரைவேலன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள் மன்னை சித்தார்த்தன், திருவாரூர் அருண்காந்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் தங்க தமிழ்செல்வன், இரா. தமிழ்ஓவியா, ஆ. வெற்றி, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப. பாலச்சந்தர், காசி சிவவடிவேல், மனிதநேய கட்சியின் மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மழை பாதிப்பால் ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை 17 சதவீதம் என்பதை 22 சதவீதம் இருந்தாலும் கொள்முதல் செய்யலாம் என உத்தரவை வழங்கா மல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.