ஒன்றிய பாஜக அரசு 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி
10 Feb 2026, 4:50 pm
<p>ஒன்றிய பாஜக அரசு 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி பிப்.12 அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாயன்று (பிப்.10) தமிழ்நாடு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் அண்ணா நகர் மேற்கு பணிமனை சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பணிமனை தலைவர் சார்லஸ் தலைமையில் தமிழ்நாடு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில பொருளாளர் சசிகுமார், சிஐடியு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே. முருகேஷ், பணிமனை செயலாளர் மரிய தாஸ், சங்க நிர்வாகிகள் தி.ஏழுமலை, சி.முரளி கணேஷ், பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
