போதைப்பொருளை அழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்
2 Jan 2026, 3:33 pm
<p><strong>போதைப்பொருளை அழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்</strong></p>
<p>முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு திருச்சிராப்பள்ளி, ஜன.3- தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத் தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை திடலில் தொடக்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறி விப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக வுள்ள நிலையில், மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார். நாள்தோறும் 15 முதல் 17 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள வைகோ, ஜன.12 ஆம் தேதி மதுரையில் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும். போதைப் பொருளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை கைவிட வேண் டும். போதைப்பொருள் என்பது பெரிய நெட்வொர்க். அதனை ஒழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள் நுழைவு வாயில்களை நாம் தடுக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு மாநில அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் இருந்து ஒரு லட்சம் போதை மாத்திரை கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த வர்களாக உள்ளனர். சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சினிமாவில் போதைப்பொருளை ஊக்கு விக்காதீர்கள். போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். குழந்தை களை பொறுப்போடு வளர்க்க வேண்டுமென பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன். ஆசிரியர்கள், சமூக பிரபலங்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு நாட்டில் நிலவும் முக்கிய மான பிரச்சனை என்றால், அது சாதி – மத மோதல்கள்தான். ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்ப வர்கள்கூட, இப்போது வெறுப்புப் பேச்சுகளை பேசியும், இரு பிரிவினருக்கு இடையே மோத லைத் தூண்டும் விதமாகவும் செயல்படுவதைப் பார்க்கிறோம். தனிப்பட்ட முறையிலான அவர்களின் கொள்கைகளுக்காக, நம்முடைய இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் - அமைதியையும் சீரழிக்கும் நாசகர வேலையில், அவர்கள் ஈடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அனைவரும் அச்சத்தில் வாழும் ஒரு நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அந்தச் சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்கு தல்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய நாட்டில் இந்த நிலைமை இருந்ததா? ஊரே ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் கடந்து, ஒருவருக்கு ஒருவரை எதிரியாகக் கட்டமைக்கும் வேலையை, பிளவுவாத சக்திகள் இன்றைக்குத் தெளிவாகச் செய்து கொண்டிருக் கிறார்கள். அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மீகத்தை, சில கும்பல்கள் வம்பு செய்வ தற்காகப் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் உள்ள வர்களே வெறுப்பு பேச்சு பேசி, மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். ஆன் மீகத்தை சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்தி லும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார். நடைபயணத்தின் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சிவ.மெய்யநாதன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
