தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யு.என்.ஐ அலுவலகத்திற்கு சீல் - முன்னறிவிப்பு இல்லாமல் ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி தில்லி போலீஸ் அராஜகம்

21 Mar 2026, 9:03 am
யு.என்.ஐ அலுவலகத்திற்கு சீல் - முன்னறிவிப்பு இல்லாமல் ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி தில்லி போலீஸ் அராஜகம்
<p>தில்லியில் உள்ள ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் &#39;யு.என்.ஐ&#39; (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br /> &#39;யு.என்.ஐ&#39; (UNI) செய்தி நிறுவனத்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 40 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், அந்த நில ஒதுக்கீட்டை நில மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை தொடர்ந்து, தில்லியில் உள்ள ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் &#39;யு.என்.ஐ&#39; (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தில்லி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் யு.என்.ஐ அலுவலகத்திற்கு நுழைந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் உட்பட சிலரை அவர்களது இருக்கைகளிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி அவமரியாதையாக பேசியுள்ளனர். இதை தொடர்ந்து யு.என்.ஐ அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.&nbsp;<br /> இந்த நிலையில் அராஜகமான முறையில் யு.என்.ஐ அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை வெளியே தள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.