தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்: ஆட்சியர் ஆய்வு

15 Jul 2026, 9:20 pm
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”  திட்டம்: ஆட்சியர் ஆய்வு
<p><strong>“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்: ஆட்சியர் ஆய்வு</strong></p><p>தேனி, ஜூலை 15- “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தேனி வட்டத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் வைத்திநாதன், பொதுமக்களிடம் 465 கோரிக்கை மனுக்களை பெற்று 10 பயனனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேனி மாவட்டம், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் தலை மையில் துவங்கியது. இந்த முகாமில் மாவட்ட அள விலான அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டு, துறை அலுவலர்கள் தேனி வட்டத் தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலகங்கள் மற்றும் விடுதிகள் மருத்துவமனைகள், வேளாண்மைத் தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மாவட்ட மைய நூலகம், கொடுவிலார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், கொடுவிலார்பட்டி கிராமத்தில் பயனாளிகளுக்கு சலுகை விலையில் வீட்டுமனை ஒப்படை வழங்குவதற்கு ஏது வாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அதனைத் தொடர்ந்து, நாகலாபுரம் ஊராட்சி அலுவல கம், சிவலிங்கநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி மையம், நாகலாபுரம் நியாய விலைக்கடை, கோவிந்தநகரம் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கவிதா, வட்டாட்சி யர் (தேனி) ரத்தினம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.