பெயரளவில் நடந்த ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்
19 Aug 2026, 11:28 pm
<p><strong>பெயரளவில் நடந்த ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்</strong></p><p>அவிநாசி, ஆக. 19-திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பம் காரணமாக பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.மாவட்ட ஆட்சியர் கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பல மணி நேரம் அங்கு காத்திருந்தனர்.</p><p>ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே மனுக்கள் பெறப்படும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு திரண்ட பொதுமக்கள், நீண்ட நேர காத்திருப்பு குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பட்டா உள்ளிட்ட தனிப்பட்ட மனுக்களை அதிகாரிகளே பெற்றுக்கொண்டனர். பொதுவான கோரிக்கை மனுக்களை ஆட்சியர் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதன் பிறகு வந்த மனுக்களையும் அதிகாரிகளே பெற்றுக்கொண்டனர்.ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க முடியாததாலும், திடீரென ஏற்பட்ட இடமாற்ற குழப்பத்தாலும் இம்முகாம் பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.</p>
