தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மறைவு நாளின் மறையாத நினைவுகள் - எஸ்.வி.வேணுகோபாலன்

14 Dec 2025, 3:45 pm
மறைவு நாளின் மறையாத நினைவுகள்  - எஸ்.வி.வேணுகோபாலன்
<p><strong>மறைவு நாளின் மறையாத நினைவுகள்&nbsp;</strong></p> <p>இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், சிஐடியுவின் முதல் பொதுச் செயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி (பி.ஆர்) அவர் களின் நினைவுநாள் டிசம்பர் 15. &nbsp;1987, டிசம்பர் 15 அன்று சென்னையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாடு தொடங்க இருந்தது. வட பழனியில் புதிதாக அமைந்திருந்த இரண்டு அரங்குகளை இணைத்து அந்த மாநாடு நடைபெறச் சாத்தியமாக்கி, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராகச் செயல்பட்டவர் தோழர் பி.ராமமூர்த்திதான். அவரைக் காண இருக்கிறோம் என்ற &nbsp;நினைவே கொண்டாட்டமாக இருந்த நேரத்தில், மாநாடு தொடக்க நாள் காலையில், பி.ராமமூர்த்தி அவர்கள் மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி வந்தது. யாரை வரவேற்கக் காத்திருந்தோமோ, அவருக்கான அஞ்சலிக் குறிப்பை மொழி பெயர்த்துத் தட்டச்சு செய்யும் முதலாவது பணி எங்களுக்கு அளிக்கப்பட்டது. கண்ணீர் மல்க அது மாநாட்டு அரங்கில் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. &nbsp;1987 மே மாதத்தில், தோழர் வி.பி. சிந்தனை இழந்த போது, &ldquo;என்னை விட இளையவரெல்லாம் எனக்கு முன்பே மறைந்துவிடுவதா&rdquo; என்று ஓட்டேரி மயானத்தில் தேம்பிய பி.ஆர்., அதே ஆண்டு டிசம்பர் 15இல் மறைந்தது வேதனையை மேலும் கூட்டியது. அவரது உடலைப் பார்க்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டிருக்க, ஒலிபெருக்கியில் கவிஞர் இ.மு. வெற்றிவளவனின் பாடல் வரிகள் துயரம் பெருக்க, &ldquo;அகில இந்திய வாலிபர் சங்க மாநாட்டுக்கு நீ தலைமை ஏற்றும் வரவில்லையே ஏன் தோழனே....&rdquo; என்ற ஆற்றாமைக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. &nbsp;ஓட்டேரி மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சிஐடியு தலைவர் பி.டி. ரணதிவே ஆற்றிய இரங்கல் உரை நெகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் நல்கிய பங்களிப்பு முதற்கொண்டு பி.ஆர். அவர்களின் பன்முக ஆற்றல், பணிகள் எல்லாவற்றையும் நினைவு கூர்ந்த அவர், ஒரு கட்டத்தில், &ldquo;சாகுந்தலம் எனும் அமர காவியம் படைத்த காளிதாசன், சகுந்தலை பற்றி வருணிப்பதை நிறுத்தி, என் மொழியின் வளம் என்னை இங்கே நிறுத்திவிடுகிறது என்று சொல்லி இருப்பான். நானும் அவ் வண்ணமே இந்த இடத்தில் நிறுத்துகிறேன், பி.ஆர் பற்றிச் சொல்ல மேற்கொண்டு ஏதும் இல்லை என்பதல்ல, எனது மொழிவளம் என்னை இங்கே நிறுத்துகிறது&rdquo; என்று குறிப்பிட்டு நிறைவு செய்தார். &nbsp;இந்த மகத்தான தலைவரின் இழப்புக்கு மத்தியிலும் மாநாடு தொடங்கியபோது, தியாகி குர்ணாம் சிங் உப்பலின் இணையர் மேடையில் எழுந்து நின்று, &ldquo;அராஜக சக்திகளுக்கு அஞ்சி ஓய மாட்டோம், தேச ஒருமைப்பாட்டைக் காக்கும் பணியில் துணிந்து முன்னேறுவோம்&rdquo; என்று சூளு ரைத்தார். அந்த ஆவேச கணத்தில் பி.ஆர். அங்கிருந்தால் எத்தனை உணர்ச்சிகரமாக உணர்ந்து கொண்டாடி இருப்பார் என்று தோன்றியது. அவர் தலைமையேற்ற மகத்தான இயக்கத்தின் ஒரு பகுதியாக நாம் எல்லோரும் இருக்கிறோம் என்ற பெருமிதம், டிசம்பர் 15 நெருங்கும் ஒவ்வொரு முறையும் கூடுதலாக மின்னுகிறது. - எஸ்.வி.வேணுகோபாலன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.