தீக்கதிர் உலக செய்திகள்
10 Sept 2026, 9:23 pm

பள்ளிகள் மீது 1,000 மேற்பட்ட தாக்குதல்கள் : ஐ.நா கவலை

உலகம் முழுவதும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐ.நா கல்வி, அறி

வியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) கவலையைத் தெரிவித்துள்ளது. 2025 இல் மட்டும் பள்ளிகள் மீது 1,680 தாக்குதல்கள் நடந்ததாக தரவுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. 2024-இல் பதிவான 1,265 தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது 33 சதவீதம் அதிகமாகும். மேலும் இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக சுமார் 25.8 கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 9.3 கோடி குழந்தைகள் முற்றிலும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

ஈரானின் கப்பல்களை தாக்குவோம் : டிரம்ப் மிரட்டல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா இதுவரை ஈரானின் ஒன்பது எண்ணெய் டேங்கர் கப்பல்களை அழித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் மிரட்டல்விடுத்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாக தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம் என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போர் பதற்றமும் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ரஷ்யாவிற்கு எதிரான மோதல் : புதிய அத்தியாயம்

ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நூற்றாண்டுகளாக நீடித்து வரும் மோதல் போக்கில் புதிய அத்தி

யாயம் உருவாகிறது. இது கடந்த காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அரசியல்

வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகள் நேரடி போரை விரும்பவில்லை. அதற்காக ஜெர்மனி,பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் அமைதியை விரும்புகின்றன என தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. பேச்சுவார்த்தை, புதிய பாதுகாப்பு வடிவம் பற்றிய அவர்களின் சடங்குப்பூர்வமானஅறிவிப்புகளையும் தீவிரமாகஎடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; ஏனெனில், அவர்களின் இந்த நிதானத்திற்குப் பின்னால் பலநடைமுறை காரணங்கள்உள்ளன என கூறியுள்ளனர்.

7000 முறைக்கும் மேல் உடன்படிக்கையை மீறிய இஸ்ரேல்

2026 ஜூன் 26 அன்று லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு, சுமார் 7,700 முறை இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டி

யுள்ளயுள்ளது. மேலும் போர் முழுமையாக நிறுத்தப்பட்டால் மட்டுமே தெற்கு லெபனான் பகுதியில் தனது ராணுவப்

பணிகளை முழுமையாகச் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் பொதுமக்கள் வாழும்

பகுதிகள் மீது குண்டுவீசி குழந்தைகள் பெண்கள் என பொதுமக்களை படுகொலை செய்து வருகின்றது. இதற்கு

கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்க் குற்றங்கள்

இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் நடத்தும் தாக்குதல்கள் போர்க் குற்றங்களாக வகைப்படுத்தப்படலாம் என்று

ஐ.நா ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் நடவடிக்கை சர்வதேச மனிதநேயச் மற்றும் மனித

உரிமை சட்டங்களை மீறுவதாக உள்ளது என ஐ.நா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் சிரியாவிற்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளை அந்நாட்டுக்குள் நிலையான மற்றும் ஆழமாக

ஊடுருவிய ஒரு தலையீடாகவே விளக்கியுள்ளது. சிரியாவில் ரோந்துப் போவது வீடுகளைச் சோதனையிடு

வது, சிரிய மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களது இடத்தில் இருந்து வெளியேற்றுவது என அனைத்து மனித உரிமை மீறல்களையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கலாச்சார திருவிழா

50 ஆவது ஆண்டு கொண்டாட்டம்

லிஸ்பான்,செப்.10-போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 50 ஆவது ஆண்டு அரசியல் கலாச்சார திருவிழா வெகு விமர்சையாக அந்நாட்டில் கொண்டாடப்பட்டது.செப்டம்பர் 4 - 6, தலைநகர் லிஸ்பன்அருகில் உள்ள அமோரா நகரத்தில்மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

போர்ச்சுக்கல் நாட்டில் 1974 ஆம்

ஆண்டு வரை கொடுங்கோல் சர்வாதிகாரஆட்சி நடைமுறையில் இருந்தது. அந்நாட்டின் ராணுவமும் மக்களும் இணைந்து நடத்திய ‘கார்னேஷன் புரட்சி’ (Carnation Revolution) மூலம் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்தனர். அதன்பிறகு ஜனநாயகத்தை நோக்கி அந்நாடு நகரத் துவங்கியது.

சர்வாதிகார காலத்தில் தடைசெய்யப்பட்ட போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி ரகசியமாக செயல்பட்டு வந்தது. இந்த புரட்சிக்கு பிறகு கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டு வெளிப்படையாக செயல்படத் தொடங்கியது. மக்கள் தங்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டாடுவதற்காக 1976 முதல் ‘அவாண்டே’ (Avante) என்ற பெயரில் அரசியல் கலாச்சார திருவிழா கொண்டாடப்படுகின்றது. அவாண்டே (Avante) என்றால் போர்த்துகீஸ் மொழியில் “முன்னேறிச் செல்” என்று பொருள். போர்த்துகீஸ்கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் பெயரும் அவாண்டே தான். அப்பெயரிலேயே இந்த திருவிழாவும் நடத்தப்படுகின்றது.

இந்த திருவிழாவிற்காக எந்த தனியார் நிறுவனத்தின் உதவியையும் அக்கட்சி வாங்குவதில்லை. கடந்த காலங்களில் நாட்டின் பல நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின் கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிதி வசூல் செய்து அமோரா நகரில் சொந்த இடத்தை அமைத்து தற்போது இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு திருவிழாவில் 5 பிரம்மாண்ட மேடைகளில் 30-க்கும் மேற்பட்டசர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் இடம்பெற்றன. நாடகங்கள், திரைப்பட திரையிடல்கள், புத்தகக் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் என அனைத்து வயதினருக்குமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கலைநிகழ்ச்சிகளுடன் அந்நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளைச் விற்பனை செய்யும்வகையில் உணவுத் திருவிழாவும் நடந்தது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறுநாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவிற்கு ஆதரவாகவும், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இந்த கலைத்திருவிழாவில் கோசம் எழுப்பினர்.

பொதுவான அரசியல் மாநாடுகள் போல இல்லாமல் ‘அவாண்டே’ திருவிழா அரசியலையும், கலை-கலாச்சாரத்தையும், மக்களுக்கான பொழுதுபோக்கையும் ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும்.

ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தத் திருவிழா, போர்ச்சுக்கல் நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், சர்வதேசத் தொழிலாளர்களின்ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு தனித்த தளமாக விளங்குகிறது.