விழுப்புரம் யமுனை தெருவில் ஆறாக ஓடும் பாதாளச் சாக்கடை நீர் மக்கள் கடும் அவதி
31 Jan 2026, 5:27 pm
<p><strong>விழுப்புரம் யமுனை தெருவில் ஆறாக ஓடும் பாதாளச் சாக்கடை நீர் மக்கள் கடும் அவதி</strong></p>
<p>விழுப்புரம், ஜன.31- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வண்டிமேடு யமுனை தெருவில் பாதாளச் சாக்கடை நீர் சாலையில் ஆறாக ஓடி, குளம் போல் தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. யமுனை தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் சூழலில், சாலையின் மேற்குப் பகுதி யில் ஏற்பட்டுள்ள பாதாளச் சாக்கடை உடைப்பால் கடந்த பல நாட்களாகக் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவ தோடு சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி யில் தட்டச்சு பயிலகம் அமைந்துள்ள தாலும், பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்தச் சாலையைத் தினமும் பயன்படுத்துவதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடி யாகத் தலையிட்டுப் பாதாளச் சாக்கடை உடைப்பைச் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
