தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமரசமற்ற சட்டப் போராளி

18 Mar 2026, 3:34 pm
சமரசமற்ற சட்டப் போராளி
<p><strong>சமரசமற்ற சட்டப் போராளி</strong></p> <p>தலைவர்கள் அஞ்சலி வழக்கறிஞர் உ.நிர்மலா ராணியின் இறுதி நிகழ்ச்சி யையொட்டி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தலைவர்கள் தோழர் நிர்மலா ராணியின் ஆளுமையை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர். உத்தப்புரம் வெற்றி &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி பேசுகை யில், &ldquo;தமிழகத்தையே உலுக் கிய உத்தப்புரம் தீண்டாமைச் &nbsp;சுவர் இடிப்புப் போராட்டத் தின் போது, காவல்துறை யினரின் தாக்குதலுக்குள் ளான 192 குடும்பங்களுக்காக வாதாடி, 1.29 கோடி ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுத் தந்தவர் நிர்மலா ராணி. சாதி ஆணவப் படு கொலைகளுக்கு எதிரான அகில இந்திய சட்ட வரை வைத் தயாரித்ததில் அவ ருக்கு முக்கியப் பங்குண்டு&rdquo; என்றார். பெண்களின் குரல் &nbsp;&ldquo;உளுந்தூர்பேட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு முதல் கரூர் சம்பவங்கள் வரை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியைப் பெற்றுத்தரத் துல்லியமான ஆய்வறிக்கைகளைத் தயார் செய்தவர் அவர். சாமா னியப் பெண்களின் பிரச்ச னைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர்&rdquo; என மாதர் சங்க மாநிலத் துணைத் தலை வர் எஸ். வாலண்டினா குறிப் பிட்டார். போராட்டக் குடும்பத்தின் வாரிசு &nbsp;சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பேசுகையில், &ldquo;நிர்மலா ராணி கல்லூரி மாணவராக இருந்த போதே கள்ளச்சாராயக் கும்பலைத் தோலுரித்து எழு திய கட்டுரை பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரின் சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என &nbsp;நெருக்கடியான சூழலிலும் கல்வியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, &nbsp;எளிய மக்களின் வழக்கறிஞ ராகத் திகழ்ந்தார்&rdquo; என்றார். அஞ்சாமையின் அடையாளம் &ldquo;காவல்துறையின் அடக்குமுறைகளைக் குழந்தைப் பருவத்திலேயே நேருக்கு நேர் சந்தித்த துணிச்சல் மிக்கவர். தொழிலில் சம்பாதிப்பதை விட, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போரா டுவதையே மேலாகக் கரு தினார்&rdquo; என சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் பி.சம்பத் புகழஞ்சலி செலுத்தினார். இறுதிப் பயணம் தோழர் நிர்மலாராணி யின் உடல், தில்லைநகர் இல்லத்திலிருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, வடுகப்பட்டியில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பேரா சிரியர்கள், மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் மற்றும் &nbsp;மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து வந்திருந்த ஏராளமான மாதர் சங்கத் தோழர்கள் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி விடை கொடுத்தனர். பெண்களின் உரிமைக் காகவும், சாதியற்ற சமூகத் திற்காகவும் அவர் ஏற்றிய போராட்டச் சுடர் என்றும் அணையாமல் தொடரும் என்பதே அஞ்சலி செலுத்தி யவர்களின் ஒருமித்த குரலாக &nbsp;இருந்தது. ஆர்.கருமலையான் இரங்கல் நிர்மலாராணி மறைவுக்கு &nbsp;சிபிஎம் மத்தியக் குழு உறுப் பினர் ஆர்.கருமலையான் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.