தெளிவற்ற போர் இலக்கு டிரம்ப்பின் ஆலோசகர்கள்- அதிகாரிகளிடையே அச்சம்!
6 Mar 2026, 3:17 pm
<p><strong>தெளிவற்ற போர் இலக்கு டிரம்ப்பின் ஆலோசகர்கள்- அதிகாரிகளிடையே அச்சம்!</strong></p>
<p>வாஷிங்டன், மார்ச் 6 - ஈரான் மீது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ள ராணுவத் தாக்கு தல்கள், அவரது நெருங்கிய ஆலோச கர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கடும் அரசியல் கவலைகளை ஏற் படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் எப்போது முடியும் என்ற தெளிவான இலக்கு (Clear endgame) இல்லாததும், இதற்கு மக்களிடையே போதிய ஆதரவு இல்லாததும் டிரம்ப்பின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். முடிவற்ற போரின் அபாயம் ஈரான் மீதானத் தாக்குதல் தொடங்கி ஆறு நாட்களைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்கா ஒரு நீண்டகாலப் போருக்குள் இழுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக டிரம்ப்பின் ஆலோச கர்கள் கருதுகின்றனர். “தொடக்கம் இருக்கிறது, ஆனால் இந்தப் போர் எங்கே முடியும் அல்லது எப்போது முடியும் என்ற தெளிவான திட்டம் நிர்வாகத்திடம் இல்லை” என்று இந்த விவகாரத்தை நன்கு அறிந்த அதி காரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு குறுகிய கால ராணுவ நட வடிக்கையாகத் திட்டமிடப்பட்டது, தற்போது பிராந்தியப் போராக விரிவடைந்து வருவது வெள்ளை மாளிகைக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஆதரவு குறைவதால் அரசியல் நெருக்கடி எந்தவொரு ராணுவ நட வடிக்கைக்கும் பொதுமக்களின் ஆத ரவு மிகவும் அவசியம். ஆனால், தற்போதைய சூழலில் அமெரிக்க மக்கள் மற்றொரு தேவையற்ற போரை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதைச் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. பொரு ளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு நிலவும் வேளையில், போருக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடுவது வரும் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என டிரம்ப்பின் அரசியல் ஆலோச கர்கள் எச்சரித்துள்ளனர். நிர்வாகத்திற்குள் நிலவும் முரண்பாடுகள் டொனால்டு டிரம்பின் வெளியுறவு கொள்கைகள் மற்றும் ராணுவ முடிவுகளில் அவரது அமைச்சரவை க்குள்ளேயே ஒருமித்தக் கருத்து இல்லை என்பது தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. சில மூத்த அதி காரிகள் இந்தப் போரைத் தீவிரப் படுத்துவதை ஆதரிக்கும் வேளை யில், பெரும்பாலான பொருளாதார மற்றும் அரசியல் ஆலோசகர்கள் இதனால் ஏற்படப்போகும் “அரசியல் விளைவுகளை” எண்ணித் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, போரின் நோக்கம் என்ன என்பது குறித்து நாட்டு மக்களிடம் விளக்குவதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வியடை ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. “வெற்றி” என்பதற்கான வரையறை என்ன என்பது கூடத் தெரியாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது, அமெரிக்காவை மீண்டும் ஒரு வியட்நாம் அல்லது இராக் போன்ற புதைகுழிக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சமே தற்போது டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கி வருகிறது.</p>
