‘பட்டா இருந்தும் குடியேற முடியவில்லை’ சிவகங்கை ஆட்சியரகம் முன்பு நரிக்குறவர் மக்கள் போராட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>‘பட்டா இருந்தும் குடியேற முடியவில்லை’ சிவகங்கை ஆட்சியரகம் முன்பு நரிக்குறவர் மக்கள் போராட்டம்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.9- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்வெட்டுமேடு பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அரசு வழங்கிய நிலப் பட்டா இருந்தும் கடந்த 10 ஆண்டுகளாக குடியேற முடியாமல் தவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் அருகே நெற்குப்பை, குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மொத் தம் 74 பேருக்கு அரசு மூன்று முறை நிலப் பட்டா வழங்கியிருந்தது. இருப்பினும், அந்தப் பகுதிகளில் வசித்து வரும் சிலர் குடியேற அனுமதிக்காததால், பட்டா பெற்ற வர்கள் வீடுகள் கட்ட முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து கடந்த 5 ஆண்டு களாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என அவர் கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திங்களன்று நடை பெற்ற சிவகங்கை மாவட்ட குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தின் போது, நரிக்குறவர் சமூ கத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட 74 நிலப் பட்டாக்கள், மனு நகல்கள் மற்றும் செய்தித்தாள் பிரதிகளை மாலையாக அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், “நாங்களும் இந்திய குடிமக்கள்தானே? ஐந்து ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும் எங்க ளுக்கு குடியிருப்பு வழங்கப்படவில்லை. எங்கள் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும். எங்களுடைய பிரச்சனையை உட னடியாக தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு வழங்கிய பட்டா இருந்தும் குடியேறும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கள் வலியுறுத்தினர்.</p>
