தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காசாவில் இடிபாடுகளை அகற்றுவதால் இஸ்ரேலின் 'கொடிய குற்றங்களுக்கான' ஆதாரங்கள் அழியும் அபாயம் உள்ளது – ஐ.நா. சிறப்பு அதிகாரி எச்சரிக்கை

7 Sept 2026, 9:03 pm
காசாவில் இடிபாடுகளை அகற்றுவதால் இஸ்ரேலின் 'கொடிய குற்றங்களுக்கான' ஆதாரங்கள் அழியும் அபாயம் உள்ளது – ஐ.நா. சிறப்பு அதிகாரி எச்சரிக்கை

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் சில பகுதிகளில் பெரிய அளவில் இடிபாடுகளை அகற்றுவது, இஸ்ரேல் செய்த 'கொடிய குற்றங்களுக்கான' (Atrocity Crimes) ஆதாரங்களை அழிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும், மனித உடல்களை மீட்பது மற்றும் அடையாளம் காண்பதைத் தடுப்பதாகவும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐ.நா. சிறப்பு அதிகாரி பிரான்செஸ்கா அல்பனீஸ் வெளியிட்ட அறிக்கையில், காசாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இடிபாடுகளை அகற்றுதல், நொறுக்குதல் மற்றும் வேறு இடத்திற்கு மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காசாவின் இடிபாடுகளுக்குள் மனித எச்சங்களும், இனப்படுகொலை உட்பட சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான முக்கியப் பொருள்சார் ஆதாரங்களும் புதைந்துள்ளன.

காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் உடல்கள் இன்னும் புதைந்து கிடப்பதாக பாலஸ்தீன அதிகாரிகளின் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியைச் சர்வதேசக் குற்றவியல் புலனாய்வாளர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒரு குற்றச் சம்பவ இடம், ஒரு கல்லறை; இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கொடூரமான குண்டுவீச்சின் தடயங்களை கொண்டுள்ளது என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.