தீக்கதிர் உலக செய்திகள்
8 May 2026, 9:48 pm

கியூபா மீதான தடை : ஐ.நா எச்சரிக்கை

ஜனவரி மாதம் கியூபா மீது விதித்த எரிபொருள் தடை, அந்நாட்டில் “ஆற்றல் பட்டினி” (Energy starvation) போன்ற நிலையை உரு வாக்கியுள்ளதாக ஐ.நா நிபு ணர்கள் வியாழக்கிழமை எச்சரித்துள்ளனர். கியூபா, அமெரிக்காவால் ஆற்றல் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளது. கியூப மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியா வசிய சேவைகளின் செயல்பாட்டை எரிபொருள் பற்றாக்குறை முடக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த “சட்டவிரோத முற்றுகை” கியூப மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பரந்த அளவிலான மனித உரிமைகளையும் சீர்குலைத்து வருகிறது எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவிடமிருந்து விலக ஐரோப்பா விருப்பம்?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 73 சதவிகிதமானவர்கள் அமெரிக்கா விடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என விரும்புவதாக ஆய்வுகள் வெளியாகியுள் ளன. குறிப்பாக இது ஐரோப்பா தனது “சொந்தப் பாதையில்” செல்ல வேண்டிய நேரம் என்று கருதுவதாகவும் ஜெர் மனியைச் சேர்ந்த பெர் டெல்ஸ்மேன் ஸ்டிஃப்டுங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல பிரிட்ட னில் உள்ள 67 சதவிகித மக்களும் விரும்புவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 46 சதவிகித மக்கள் அமெரிக்கா மீது நம்பிக்கை தெரிவித்திருந்த நிலை யில் தற்போது 42 சதவிகிதமாக குறைந்துள்ளது.