தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலஸ்தீன குழந்தைகளை திட்டமிட்டுக் குறிவைக்கும் இஸ்ரேல்! - ஐ.நா சபையின் விசாரணை ஆணையம் அறிக்கை

24 Jun 2026, 4:44 pm
பாலஸ்தீன குழந்தைகளை திட்டமிட்டுக் குறிவைக்கும் இஸ்ரேல்! - ஐ.நா சபையின் விசாரணை ஆணையம் அறிக்கை

பாலஸ்தீனக் குழந்தைகளை திட்டமிட்டு குறிவைத்து தாக்குவதன் மூலம் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் இனப்படுகொலை மற்றும் கொடூரக் குற்றங்களை மேற்கொண்டு வருகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அதன் தலைவர் எல்.முரளிதர் நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி, பாலஸ்தீனக் குழந்தைகளை திட்டமிட்டு குறிவைத்து தாக்குவதன் மூலம் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் இனப்படுகொலை மற்றும் கொடூரக் குற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 2023 அக்டோபர் 7 முதல் 2025 அக்டோபர் 7 வரையிலான காலகட்டத்தில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களில் சுமார் 30 சதவீதம் பேர் குழந்தைகள். இதே காலகட்டத்தில் குறைந்தது 20,179 குழந்தைகள் உயிரிழந்ததுள்ளனர்; 44,143 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

காசாவில் உள்ள குழந்தைகள், பட்டினி மற்றும் கல்வி, சுகாதாரத்தின் சீர்குலைவு ஆகியவை காரணமாக அவர்களின் குழந்தைப் பருவத்தை இழந்துள்ளநர். பாலஸ்தீனியக் குழந்தைகள் இஸ்ரேலிய சிறைகளிலும், தடுப்புக்காவல் நிலையங்களிலும் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மற்றும் பிற கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; குறிப்பாக பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காசாவில் இருந்து மக்கள் குடும்பங்களுடன் வெளியேற முயன்றபோதும், பாதுகாப்பு முகாம்களுக்கு சென்றபோதும் குழந்தைகளை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு இணங்க, பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் வகையிலான மீறல்கள் மற்றும் குற்றங்களைச் செய்வதை நிறுத்துமாறும், கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் தொடர்ந்து இருப்பதைக் முடிவுக்குக் கொண்டுவருமாறும் விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.