முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Jun 2026, 8:44 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஐ.நா விசாரணை ஆணைய தலைவர் முரளிதர்

பாலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேல் ராணுவத்தால் வேண்டுமென்றே கொல்லப்பட்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னரும் கூட, இஸ்ரேலால் குழந்தைகள் தொடர்ந்து கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் நிகழ்ந்து வருகிறது.

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

பயிற்சி மையங்களிலும் மருத்துவமனைத் தீ விபத்துகளிலும் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். பாஜகவின் முதலமைச்சர் மீது பெரும் நில அபகரிப்புப் புகார் உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்தியப் பிரதமரோ தன்னை விமர்சிப்பவர்களைக் கேலி செய்கிறார்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

ராமர் கோவில் நிதி முறைகேடு பற்றி கேள்விகள் கேட்பது ‘அயோத்தியை அவமதிக்கும் செயல்’ என்று உ.பி முதல்வர் கூறுகிறார். ஆனால், கோவில் கட்டுமானக் குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா இதனை ‘வெளிப்படையான கொள்ளை’ என்று குறிப்பிடுகிறார்.

பத்திரிகையாளர் முகமது ஜுபைர்

பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், கொல்கத்தாவில் ‘ரெட் ரோடு’ 7 நாட்களுக்கு மூடப்படுகிறது. இதே சாலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எனக்கூறி ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram