தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

230 கோடி மக்கள் தினமும் பசியுடன் உறங்குகின்றனர்: ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் தகவல்

17 Jul 2026, 7:24 pm
230 கோடி மக்கள் தினமும் பசியுடன் உறங்குகின்றனர்: ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் தகவல்

உலகம் முழுவதும் 10 பேரில் ஒருவர் இன்னும் தீவிர வறுமையில் வாழ்கிறார், 230 கோடி மக்கள் தினமும் பசியுடன் உறங்குகின்றனர், மேலும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமது தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட கூட்டத்தில் பேசிய அவர், 2030 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) தொடர்பான 2026-ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையில், மொத்த இலக்குகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை திட்டமிட்டபடி அல்லது மிதமான முன்னேற்றத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், நாடுகளுக்கு இடையிலும், இலக்குகளுக்கு இடையிலும் முன்னேற்றம் மிகவும் சமமற்றதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றம் கண்ட துறைகளில், உலக மக்கள்தொகையில் 92 சதவீத பேருக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. மேலும், 2015-இல் 40 சதவீதமாக இருந்த இணையப் பயன்பாடு தற்போது 74 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

"நிலையான வளர்ச்சி இலக்குகள் முக்கியமானவை; அவை பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இன்றைய உலகம் முற்றிலும் மாறிவிட்டது".

புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை, பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, உணவுப் பாதுகாப்பு நெருக்கடி, கடன் சுமை மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை போன்ற பல்வேறு சவால்கள், 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் முயற்சிகளை தொடர்ந்து பாதித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள SDG உச்சி மாநாடு வெறும் முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டமாக இல்லாமல், 2030 இலக்குகளை நிறைவேற்றுவதற்கான அரசியல் உறுதிப்பாடு, முதலீடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய தருணமாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.