தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுபான்மையினரை குறிவைத்து எஸ்ஐஆர் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கம் ஒன்றிய பாஜக அரசுக்கு ஐ.நா., சபை நோட்டீஸ்

12 Jul 2026, 9:18 pm
சிறுபான்மையினரை குறிவைத்து எஸ்ஐஆர் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கம் ஒன்றிய பாஜக அரசுக்கு ஐ.நா., சபை நோட்டீஸ்

சிறுபான்மையினரை குறிவைத்து எஸ்ஐஆர் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கம் ஒன்றிய பாஜக அரசுக்கு ஐ.நா., சபை நோட்டீஸ்

நாட்டில் மக்கள் ஆட்சியா ளர்களை தேர்ந்தெடுக் கும் ஜனநாயக மரபை ஒழிக்கும் நோக்கத்திலும் ; ஒரே கட்சி ஒரே ஆட்சியை கொண்டு வர வும் வாக்காளர்களை தேர்ந்தெ டுக்கும் சிறப்பு திட்டத்தை மோடி அரசு தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதாவது தோல்வி பயத்தால் சிறுபான்மை யினர், தலித், பழங்குடி மக்களை குறிவைத்து (நீக்கம்), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) மோடி அரசு நாடு முழு வதும் தீவிரமாக மேற்கொண்டு வரு கிறது.

5.2 கோடி

முதற்கட்டமாக பீகாரிலும், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட தேர்தலை சந்தித்த மாநிலங்களி லும் எஸ்ஐஆர் நடந்து முடிந்தது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மூன் றாம் கட்ட எஸ்ஐஆர் பணி முடிவ டைந்து, வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் 5.2 கோடி (2ஆம் கட்டம் வரை) பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதில் சிறு பான்மையினர், தலித், பழங்குடி மக் கள் வாக்குகள் 90% ஆகும். சிறு பான்மையினர், தலித், பழங்குடி மக் கள் வாக்களித்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், மோடி அரசு எஸ்ஐஆர் பணியை ஒரு முக்கிய வேலையாக தேர்தல் ஆணையம் மூலம் மேற்கொண்டு வருகிறது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கே தெரியும்.

ஐ.நா. சபை

இந்நிலையில், எஸ்ஐஆர் பணி மூலம் சிறுபான்மையினரை குறி வைத்து 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக் கம் அளிக்க வேண்டும் ஐ.நா சபை யின் சிறுபான்மையினர் விவகாரங் கள், கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய பிரிவுகள், ஒன்றிய மோடி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக ஐ.நாவின் சிறப்புத் தூதர்கள் நிக்கோலஸ் லெவ்ராட், ஐரின் கான் மற்றும் நசீலா கானியா ஆகியோர் இணை ந்து ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடித்தத்தில்,”எஸ்ஐஆர் என அழைக்கப்படும் சிறப்புத் தீவிர சீர்திருத்தத்தின் மூலம் இந்தியா வின் 12 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த மாக 5.2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள் ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத் தின் போது மனித உரிமைகள், பேச்சுரிமை மற்றும் அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமைகள் ஆகியவை மீறப்பட் டுள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது.

பாஜக முதலமைச்சரின் வெற்றி

வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதற்கு மேற்கு வங்கத் தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகு தியை ஒரு முக்கியமான ஆதாரம் ஆகும். தற்போது மேற்கு வங்க முத லமைச்சராக உள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வென்ற நந்திகிராம் தொகுதியில் நீக்கப் பட்ட ஒட்டுமொத்த வாக்காளர் பெயர்களில் 95 சதவீதம் பேர் முஸ் லிம் வாக்காளர்கள் ஆவர். ஆனால், அந்தத் தொகுதியின் மொத்த மக் கள் தொகையிலேயே முஸ்லிம்கள் 25 சதவீதம் மட்டுமே உள்ளனர். நீக்கப்பட்ட பலரிடம் முறையான, செல்லுபடியாகும் இந்திய அடை யாள ஆவணங்கள் இருந்தபோதி லும் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது எப்படி? இதுகுறித்து பாதிக்கப்பட்ட வர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகிய போதிலும், இந்த சீர்திருத்த நடவ டிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கா லத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதேபோன்ற விவகாரங்கள் பீகாரி லும் நடந்துள்ளதால் சிறுபான்மை யினரிடையே குடியுரிமை சார்ந்த அச்சம் எழுந்துள்ளது.

ஏஐ மழுப்பல்

வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய இந் திய அரசு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிக மோசமானது. ஏஐ தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தகுதியான லட்சக்க ணக்கான வாக்காளர்கள் பட்டியலி லிருந்து தவறாக வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகமும் கிளம்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினரைத் தேர்தல் நடை முறையிலிருந்து நீக்குவது போன்ற அணுகுமுறை, முஸ்லிம் குடிமக்க ளுக்கு எதிரான பாகுபாட்டிற்கு அதி காரப்பூர்வ அங்கீகாரம் அளிப்ப தைப் போலாகிவிடும். இது இந் தியா ஏற்றுக்கொண்டுள்ள ‘சர்வ தேச இனப் பாகுபாடு ஒழிப்பு உடன் படிக்கை மற்றும் 1992ஆம் ஆண் டின் ஐ.நாவின் சிறுபான்மையினர் உரிமைப் பிரகடனத்திற்கு’ எதிரானது.

பதிலளிக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கை, அதற்கான முறை யான காரணங்கள், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு களின் எண்ணிக்கை மற்றும் சிறு பான்மையினருக்கு எதிரான பாகு பாட்டைத் தவிர்க்க அரசு எடுத்த நட வடிக்கைகள் உள்ளிட்ட 7 முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை அளிக்க வேண்டும்” என மோடி அரசிடம் ஐ.நா., தூதர்கள் தங்கள் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.