கியூபா மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஐ.நா அவையில் கண்டனம் 34 ஆவது முறையாக தீர்மானம்
29 Oct 2026, 10:00 pm

கியூபா மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஐ.நா அவையில் கண்டனம் 34 ஆவது முறையாக தீர்மானம்

நியூயார்க்,அக்.29-கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை ஐ.நா பொது அவை மீண்டும் ஒருமுறைகண்டித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்களையும் மீறி, தடைகளை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 130 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 130 நாடுகள் வாக்களித்துள்ளன. இனப்படுகொலைக்கான ஆதரவு மற்றும்அமெரிக்காவின் மிரட்டல்கள் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இத்தீர்மானத்திற்கு எதிராக 17 நாடுகள் வாக்களித்துள்ளன. 25 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.

கடந்த ஆண்டு கியூபா மீதான தடைகளை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 165 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது இருந்தன. இந்நிலையில் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் அல்லது நடுநிலை வகிக்க வேண்டும் என அமெரிக்கா பல நாடுகளை மிரட்டியதன் விளைவாக தற்போது வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்காக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளிடம் அமெ

ரிக்கா தீவிரமாக லாபி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த மிரட்டல்களுக்கு பணியாமல் 130 நாடுகள் கியூபா விற்கு ஆதரவாக இருப்பது முக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்த ஜெர்மனி, இத்தாலி, லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட பல நாடுகள் நடுநிலை வகித்தன சிலவை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் மிரட்டல்களை உறுதி செய்வதாக உள்ளன.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக அந்நாடு பெரும்நெருக்கடியில் உள்ளது. சில மாதங்க

ளுக்கு முன் விதித்த எண்ணெய் இறக்குமதி தடை காரணமாக அந்நாட்டில் பெரும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுமிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டுள்ளது.

கியூபா மீதான அமெரிக்காவின் தடைகளை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா அவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்து அமெரிக்க அரசின்

தடைகளை கண்டிக்கின்றன. இப்படிப்பட்டநிலையிலும் வாக்கெடுப்பு முன்னதாக ஐ.நா பொது அவையில் பேசிய அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் கியூபா மீது எந்த தடைகளும் விதிக்கப்பட வில்லை என அப்பட்டமாக உலகின் முன்னாள் பொய் சொன்னார்.

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் தலைமையிலான குழுவினர் அவையிலே எழுந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.