தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனம்

1 Mar 2026, 4:03 pm
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனம்
<p><strong>அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனம்</strong></p> <p>ஈரானுக்கு எதிராக தாக்கு தல் நடத்தி வரும் அமெ ரிக்கா - இஸ்ரேலுக்கு ஐக் கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் &nbsp;கூறுகையில்,&rdquo;மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதல் போக்கை வன்மையாகக் கண்டிக் கிறேன். ஈரானுக்கு எதிராக அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களும், அதனைத் தொட ர்ந்து ஈரான் நடத்தியுள்ள தாக்கு தல்களும் சர்வதேச பாதுகாப்பைக் &nbsp;குலைக்கின்றன. உலகின் மிகவும் &nbsp;கொந்தளிப்பான இந்தப் பிராந்தி யத்தில், எவராலும் கட்டுப்படுத்த முடியாத தொடர்ச்சியான அசம்பா விதங்களை உருவாக்கும் அபா யத்தை தாக்குதல் சம்பவங்கள் கொண்டுள்ளன. நிலையான அமை தியை, முறையான பேச்சுவார்த்தை &nbsp;மற்றும் கலந்தாலோசனைகள் உள் &nbsp;ளிட்ட அமைதி வழிகளால் மட்டுமே அடைய முடியும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஐக்கிய நாடுகள் &nbsp;சபையின் &nbsp;சாசனம் அடிப்படை ஆதா ரமாகத் திகழ்கிறது&rdquo; என்று அவர் கூறினார். மேலும் &nbsp;ஐநா பாதுகாப்பு கவுன் &nbsp;சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய &nbsp;பொதுச் செயலாளர் குட்டரெஸ், &ldquo;மத்திய கிழக்கில் மோதல் தீவிர மடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்கு தல்கள் ஐநா சாசனம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை மீறுவதாக உளள்து. அதே வேளையில் பஹ் &nbsp;ரைன், இராக், ஜோர்டான், குவைத், &nbsp;கத்தார், சவூதி அரேபியா மற்றும் &nbsp;ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடு களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் &nbsp;வகையில் ஈரான் நடத்திய பதி லடித் தாக்குதல்களும் கண்டிக்கத் தது தான்&rdquo; என அவர் பேசினார். அமெரிக்கா - இஸ்ரேல் போர்க் குற்றவாளிகள் முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத் தில், ஈரான் மீது நடத்திய தாக்கு தல்களை அமெரிக்காவும் இஸ்ரே லும் நியாயப்படுத்திப் பேசின. &nbsp;அதே நேரத்தில், இத்தாக்குதலில் ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு களை ஒரு &ldquo;போர்க்குற்றம்&rdquo; என்று &nbsp;ஈரான் சாடியது. சீனா கடும் கண்டனம் ஈரானின் உயர் தலைவர் அய துல்லா அலி காமேனியை அமெ ரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கொன்றதற்கு சீனா கடும் கண்ட னத்தை தெரிவித்தது. இதுதொடர் &nbsp;பாக சீன வெளியுறவு அமைச்சகம் &nbsp;வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;இந்த &nbsp;படுகொலைச் சம்பவம், ஈரா னின் இறையாண்மை மற்றும் பாது காப்பை கடுமையாக மீறும் செயலா கும். இது ஐநா சாசனத்தின் நோக் &nbsp;கங்கள் மற்றும் கொள்கைகளை யும், சர்வதேச உறவுகளின் அடிப் படை நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் செயலாக கருதப்படுகிறது. சீனா இதனை உறுதியாக எதிர்ப்பதுடன், கடுமை யாகக் கண்டிக்கிறது.ராணுவ நட வடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்&rdquo; என அதில் கூறப் &nbsp;பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.