தீக்கதிர் உலக செய்திகள்
18 May 2026, 9:28 pm

காலநிலை மாற்றம் புதிய தீர்மான வரைவு

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உலக நாடுகளின் கடமைகளை வலியுறுத்தும் புதிய தீர்மான வரைவு குறித்து ஐ.நா பொது அவை புதன் கிழமை விவாதிக்க உள்ளது. பல நாடுகள் தங்களின் தேசி யப் பாதுகாப்பு மற்றும் தொழில் துறை சார்ந்த நலன் களுக்கு முக்கியத்துவம் அளித்ததால், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பணி முறையாக கவனிக்கப் படவில்லை. தற்போதைய புதிய தீர்மானம் காலநிலையைப் பாதுகாக்க உலக நாடு கள் தங்களின் கடமைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.

தீவிரமடையும் எபோலா பாதிப்பு சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பு

காங்கோவில் ‘பண்டிபுகியோ’ வகை சேர்ந்த எபோலா வைரஸ் மிக வேகமாகப் பரவி, இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். இந்தத் தொற்று தற்போது அந்நாட்டின் முக்கிய நகரான கோமா பகுதிக்கு பரவியுள்ளதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையை பிரகட னப்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பின் உண்மை நிலையானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விடவும் மிகப் பெரியதாக இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. உள்நாட்டுப்போர்கள் நடந்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.