உமர் காலித், ஷர்ஜீல் இமாம் : இடைக்கால ஜாமீன் ஒத்திவைப்பு
yesterday

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் : இடைக்கால ஜாமீன் ஒத்திவைப்பு

புதுதில்லிஜேஎன்யு மாணவர் உமர்காலித், சமூக ஆர்வலர்ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் இடைக்கால ஜாமீன் மனுக்களை புதன்கிழமை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தாண்டி, நீண்டகால சிறைவாசம் மற்றும் விசாரணை தாமதத்தைக் கருத்தில் கொண்டுஜாமீன் வழங்க முடியுமா என்ற சட்டக் கேள்வியை மூன்று நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்குமாற்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. அந்த அமர்வின் தீர்ப்புக்குப்பிறகே இடைக்கால நிவாரணம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி சூர்ய காந்த்,நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி,வி. மோகனா ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, உமர் காலித் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், ஷர்ஜீல் இமாம் சார்பில்சித்தார்த் தவேவும் ஆஜராகி, இருவரும் 6 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஸ்லீம் அகமது, அப்துல் காலித் சைஃபி ஆகியோருக்கு கடந்த மே 22 அன்றுநீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியதோடு, யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டப் பிரிவுகள் தொடர்பான கேள்வியைப் பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்ததை கபில் சிபல் சுட்டிக்காட்டினார். அதே அடிப்படையில் இவர்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரினார்.ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இன்றுநாங்கள் இதை விசாரிக்கப் போவதில்லை.2021 இல் ‘கே.ஏ. நஜீப்’ வழக்கின் தீர்ப்பை வெவ்வேறு அமர்வுகள் வெவ்வேறு விதமாக விளக்கியுள்ளன. ஒரு அமர்வுஒரு கருத்தையும், மற்றொரு அமர்வு வேறொரு கருத்தையும் கூறுகிறது. இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காண மூன்று நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வை அமைக்க வேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.