தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உமர் காலித்தின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

19 May 2026, 9:01 pm
உமர் காலித்தின் இடைக்கால  ஜாமீன் மனு தள்ளுபடி

உமர் காலித்தின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி உமர் காலித் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவிருக்கும் தனது தாயாரைக் கவனித்துக்கொள்வதற்காக 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி உமர் காலித் மனு தாக்கல் செய்திருந்தார்.

பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 483 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973-ன் பிரிவு 439 ஆகியவற்றின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் (Sameer Bajpai) விசாரித்தார்.

இந்த வழக்கின் பிற குற்றவாளிக ளுக்குப் பலமுறை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்ற நிபந்தனைகளை ஒருபோதும் மீறவில்லை. ஆனால், அதற்காகக் குற்ற வாளி எப்போது ஜாமீன் கேட்டாலும் நீதிமன்றம் அதை வழங்க வேண்டும் என்று அர்த்தமல்ல என இவ்வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ளது.

உபா வழக்குகளிலும் கூட ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி. சிறையில் அடைப்பது ஒரு விதிவிலக்கு. உபா சட்டத்தின் பிரிவு 43 D (5) (இது ஜாமீன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது) கால வரையற்ற சிறைவாசத்தை நியாயப் படுத்த முடியாது. எந்த வழக்காக இருந்தா லும் அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.இதுஅரசி யலமைப்பின் 21, 22ஆவதுபிரிவுகளிலிரு ந்து பெறப்பட்ட ஒருகொள்கையாகும்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை, ஜாமீன் வழங்கலாம் என உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு உத்தரவிட்ட மறு தினம் உமர் காலித் பிணை மறுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.