பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உமர் காலித் ஆவணப்படத் திரையிடலுக்கு ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் மிரட்டல்
13 Sept 2026, 9:18 pm
<p><strong>பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உமர் காலித் ஆவணப்படத் திரையிடலுக்கு ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் மிரட்டல்</strong></p><p>பெங்களூருகர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய சட்டப் பல்கலைக் கழகம் (என்எல்எஸ்ஐயு) உள் ளது. இப்பல்கலைக்கழகத்தில், மோடி அரசின் அடாவடியால் 6 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையின்றிச் சிறையில் இருக்கும், ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் குறித்து லலித் வச்சானி இயக்கிய ‘கைதி எண் 626710 ஆஜராகியுள்ளார்’ (Prisoner No. 626710 is Present) என்ற ஆவணப்படம் செப். 14 அன்று திரையிடப்படும் என என்எல்எஸ்ஐயு நிர்வாகம் அறிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், உமர் காலித் ஆவணப்படத் திரையிடலுக்கு ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் மிரட்டல் விடுத் துள்ளனர். இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் - பாஜக மாணவர் அமைப் பான ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக் கையில்,”செப். 14 அன்று திட்டமிடப் பட்டுள்ள உமர் காலித் ஆவணப்படத்திரையிடலை ரத்து செய்ய வேண்டும்.இதற்கு அனுமதிக்க மாட்டோம். கல்வி வளாகங்கள் தேசிய ஒருமைப்பாட் டிற்கும் கற்றலுக்கும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும்; மாறாக, அரசியல் பிரச்சாரங்களுக்கான தளமாகவோ அல்லது சிவில் வன்முறைகளை நியாயப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது” என மிரட்டல் விடுத்து, என்எல்எஸ்ஐயு நிர்வாகத்திற்குப் புகார் கடிதமும் அனுப்பியுள்ளது. ஆனால், ஏபிவிபி-யின் கடிதத்தைப்பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
