உளுந்தூர்பேட்டை அருகே சர்வீஸ் சாலையில் மக்காச்சோளம் உலர வைப்பு களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
22 May 2026, 1:37 am
<p><strong>உளுந்தூர்பேட்டை அருகே சர்வீஸ் சாலையில் மக்காச்சோளம் உலர வைப்பு களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை</strong></p><p>உளுந்தூர்பேட்டை, மே 21– கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் விவசாயிகள் அறுவடை செய்த மக்காச்சோளத்தை உலர வைப்ப தால் எந்த நேரமும் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவ தாக வாகன ஓட்டிகளும் விவசாயிகளும் அச்சம் தெரி வித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயமே முக்கிய பங்கு வகித்து வருகிறது, வாழ்வாதாரத்திற்கான மாற்று வேலை வாய்ப்புகள் இம்ம மாவட்டத்தில் இல்லை என்ப தால் பெரும்பாலோனார், விவ சாயத்தையே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது.பெரும்பாலும் மாவட்டத்தில் கரும்பு சாகுபடியில் அதிக கவனம் செலுத்தி வந்த விவசாயிகள் தற்சமயம் மக்காச் சோள சாகுபடியில் பல ஏக்கர் பரப்பள வில் மாவட்டத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆர்.ஆர்.குப்பம், பள்ளி யந்தாங்கல், காட்டுநெமிலி, வண்டிபாளையம், பாதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை சாதகமாக இருந்ததால் மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக உள்ளது. இடப்பற்றாக்குறையால் சாலைக்கு வரும் விளைபொருள் அறுவடை செய்யப்பட்ட மக்காச் சோளத்தை உலர வைப்பதற்கு கிராமங்களில் போதிய உலர்களம் மற்றும் இடவசதி இல்லாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விவ சாயிகள் டிராக்டர் மற்றும் லாரி களில் வாடகைக்கு வண்டி பிடித்து, சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலைக்கு மக்காச்சோளத்தை கொண்டு வந்து கொட்டி பரப்பி உலர வைக்கின்றனர். விபத்து அபாயம் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் வேகமாக சென்று வருகின்றன. சாலை முழுவதும் மக்காச்சோளம் பரப்பப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்க ளில் மக்காச்சோளம் பரப்பப்பட்டி ருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் மக்காச் சோளத்தை கிளறி விடுவதற்காக விவசாயிகள் சாலையிலேயே நின்று வேலை செய்வதால் அவர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. விவசாயிகள் வேதனை இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நல்ல விளைச்சல் கிடைத்தும் மக்காச்சோளத்தை உலர வைக்க இடம் இல்லை. வாடகை வண்டிக்கு ஒரு நடைக்கு 2000 ரூபாய் வரை செலவாகிறது. கூலி ஆட்களுக்கு தனியாக கொடுக்க வேண்டும். இப்படி கூடுதல் செலவு செய்வதால் எங்களுக்கு லாபம் என்பதே கிடைப்பதில்லை. வேறு வழியின்றிதான் சாலையில் காய வைக்கிறோம்” என வேதனை யுடன் தெரிவித்தனர். அரசுக்கு கோரிக்கை மாவட்டம் முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் அறு வடை காலங்களில் இதே நிலை தான் தொடர்வதாகவும், மக்காச் சோளம் மற்றும் நெல் போன்ற விளைபொருட்களை உலர வைப்பதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் அரசு சார்பில் பொதுவான களம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாநில முதல்வர் விவசாயத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பது முதல்வருக்கு இவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பெரும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்க ளும் விவசாயிகளும் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
