15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்
25 Sept 2026, 12:52 am

15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்

உளுந்தூர்பேட்டை,செப்.24-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை நகராட்சியில் நிலவி வரும் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறை யாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரி வித்து வருகின்றனர். இதனால் அன்றாட தேவை களுக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாண

வர்களை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை யும், வேலைக்குச் செல்லும்

பொதுமக்கள் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல

முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்களிடம் பொது மக்கள் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இருப்பினும் குடிநீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க

வில்லை என நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் அதிருப்திய டைந்த திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி களைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி பேத மின்றி ஒன்றிணைந்து, உளுந்தூர்பேட்டை நக ராட்சி அலுவலகத்திற்கு சென்று, குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க வலியுறுத்தி நக ராட்சி ஆணையரை முற்றுகை யிட்டு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை உடனடியாக சரிசெய்து, அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.