உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
12 Jun 2026, 11:00 pm
<p><strong>உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூன் 12- உளுந்தூர்பேட்டை நகரில் நாள்தோறும் நில வும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்க ளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் மையப்பகுதியாக உளுந் தூர்பேட்டை விளங்குவ தால், இங்கு தினமும் ஆயிர க்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சாலையோர ஆக்கிர மிப்புகள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் தீராத சிக்கலாக உருவெடுத் துள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையம் அருகே யுள்ள உழவர் சந்தை முதல் தாலுகா அலுவலகம் வரையிலான பகுதியில், சாலையோரக் கடைகள் மற்றும் கட்டடங்கள் ஆக்கிர மித்துள்ளதால், 15 மீட்டர் அகலமுள்ள சாலை வெறும் 8 மீட்டராகச் சுருங்கியுள் ளது. மேலும், சாலையி லேயே கடைகள் விரிப்பதும், வாகனங்களை நடுச்சாலை யில் நிறுத்துவதும் நிலை மையை மேலும் மோசமாக்கு கிறது. காவல்துறையினர் தடுப்புகள் மற்றும் கயிறு களைக் கொண்டு போக்கு வரத்தைச் சீரமைக்க முயன் றாலும், ஆக்கிரமிப்பாளர் கள் தொடர்ந்து இடையூறு செய்வதாகவும், பணியில் இருக்கும் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடு வதாகவும் புகார்கள் எழுந்து ள்ளன. இதனால் பள்ளிக் குச் செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக் குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, உளுந்தூர் பேட்டை நகரின் முக்கியச் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளைத் தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், வாகனங் களை நிறுத்துவதற்குத் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகின்ற னர். போக்குவரத்து விதி களை மீறுவோர் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உளுந்தூர்பேட்டை மக்க ளின் நீண்டநாள் கோரிக் கையாக உள்ளது.</p>
