தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி

9 Jul 2026, 11:17 pm
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி
<p><strong>உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி</strong></p><p>உளுந்தூர்பேட்டை,ஜூலை 9 – கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, இருக்கை வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டத்தில் 6 பிர்க்காக்கள் மற்றும் 151 வருவாய் கிராமங்கள் உள்ளன. நாள்தோறும் பட்டா, சிட்டா, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணி களுக்காக ஏராளமான பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, முதியவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணவும், சான்றிதழ்கள் பெறவும் காலை முதல் மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அவ்வாறு காத்திருக்கும் பொது மக்களுக்குத் தேவையான இருக்கை வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை என எந்தவொரு அடிப்படை வசதியும் அலுவலகத்தில் செய்யப்படவில்லை. இத னால், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தை களுடன் வருபவர்கள் நீண்ட நேரம் கால்கடுக்க நின்ற படியே மனு அளிக்க வேண்டிய சூழல் நிலவு கிறது. நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கு பொது மக்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி யுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் தாலுகா நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிரம மின்றி காத்திருக்கும் வகையில், உடனடி நட வடிக்கையாகக் காத்தி ருப்போர் கூடம் அமைப்ப தோடு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.