தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போதுமான அரசுப் பேருந்துகள் இல்லாததால் படியில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் தொடரும் ஆபத்தான பயணம்!

21 Jul 2026, 11:34 pm
போதுமான அரசுப் பேருந்துகள் இல்லாததால்  படியில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் தொடரும் ஆபத்தான பயணம்!
<p><strong>போதுமான அரசுப் பேருந்துகள் இல்லாததால் படியில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் தொடரும் ஆபத்தான பயணம்!</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 21- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை பகுதிப் பள்ளிகளுக்குச் செல்லப் போதுமான அரசுப் பேருந்து வசதி இல்லாததால், சுற்றுவட்டாரக் கிரா மங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள நெய்வினை, பில்ராம்பட்டு, அங்கனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலைப் பள்ளி நேரங்களில் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமாகக் கூட்டம் ஏற்பட்டு மாணவர்களால் உள்ளே ஏற முடியாத நிலை உருவாகிறது. வேறு வழியின்றி சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், கதவருகே நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன. இதனால் “படியில் பயணம் - நொடியில் மரணம்” என்ற அச்சத்துடன் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தில், மாணவர்கள் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் நெய்வினை, பில்ராம்பட்டு, அங்கனூர் வழியாகக் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கெனத் தனிச் சிறப்புப் பேருந்துகளை ஒதுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் எனப் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.