உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் நோய் பரவும் அபாயம்
28 Oct 2026, 11:12 pm

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் நோய் பரவும் அபாயம்

உளுந்தூர்பேட்டை,அக்.28-உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை கழிவுநீர் அதிக அளவு வெளியே கசிந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை பஞ்சாப் நேஷனல் வங்கி அருகிலும், எல்ஐசி அலுவலகம் அருகிலும் நீடிக்கிறது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.