தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை அருகே உப்பு கலந்த குடிநீரால் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு

10 Oct 2026, 2:12 am
உளுந்தூர்பேட்டை அருகே உப்பு கலந்த குடிநீரால் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே உப்பு கலந்த குடிநீரால் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு

உளுந்தூர்பேட்டை, அக்.9-உளுந்தூர்பேட்டை அருகே உப்பு கலந்த குடிநீரால் 20-க்கும் மேற்பட்டோ ருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவ சாயம் மற்றும் தினக்கூலி வேலையை மட்டுமே நம்பி வாழும் இவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை.

இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 2 மினி டேங்குகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் உவர்ப்பு தன்மை மிக அதிகமாக உள்ளது. இந்த நீரை குடிக்கவோ, சமைக்கவோ முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த உவர்ப்பு நீரை தொடர்ந்து பயன்படுத்தியதால் தற்போது வரை பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக கல் மற்றும் கிட்னி பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ செலவுக்கே தங்கள் வருமானத்தை இழந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தண்ணீரில் பால் காய்ச்சி னால் பால் திரிந்து போவதாகவும், சாதம், குழம்பு விரைவில் கெட்டுப் போவதாகவும், தண்ணீரை கொதிக்க வைத்தால் பாத்திரத்தின் அடியில் வெள்ளை உப்பு படிவு படிவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதனால் வேறு வழியின்றி தினமும் ரூ.40 கொடுத்து கேன் தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலி வாங்கும் தங்களால் தினமும் தண்ணீருக்கே ரூ.40 செலவழிக்க முடியவில்லை என குமுறுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் வழங்கவும், உப்பு நீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.