தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் உளுந்தூர்பேட்டை ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

16 Jun 2026, 11:58 pm
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் உளுந்தூர்பேட்டை  ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
<p><strong>போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் உளுந்தூர்பேட்டை ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை</strong></p><p>உளுந்தூர்பேட்டை,ஜூன் 16- கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இத னால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி வழி யாக தினமும் நூற்றுக்கணக் கான அரசு மற்றும் தனி யார் பேருந்து கள் சென்று வருகின்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களைச் சாலை ஓரம் நிறுத்துதல் மற்றும் பெரியசெவலை சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படுகிறது. இத னால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த நெரிசலைக் குறைக்க, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘ரிங் ரோடு’ அமைக்கும் பணிகள் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப் பட்டன. ஆனால், கடந்த 5 மாதங்களாக இப்பணி கள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பணிகள் இன்னும் முழுமை யாகத் தொடங்கப்படாத தால், பொதுமக்களின் துய ரம் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள ரிங் ரோடு பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெ.சசிக்குமார்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.