தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

6 Oct 2026, 1:27 am
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை,அக்.5-கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனா குப்பம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

நைனாகுப்பம் கிரா மத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டிக்குள் பறவைகள், குரங்குகள் இறந்து கிடப்பதாகவும், தொட்டி கட்டிய நாள் முதல் சுத்தம் செய்யப் படாததால் குடிநீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசு வதாகவும், உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் குடிக்க முடியாமல் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த 20 நாட்க ளாக ஊராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனவும், செங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையிடம் பல முறை புகார் அளித்தும் நட வடிக்கை இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து நைனாகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட

னர். இதனால் உளுந்தூர் பேட்டை-விருத்தாசலம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக

போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீ சார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். ஊரக வளர்ச்சித் துறைஅதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி யளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.