தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேருந்து நிழற்குடை இல்லாததால் வெயிலில் தவிக்கும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

1 hour before
பேருந்து நிழற்குடை இல்லாததால்  வெயிலில் தவிக்கும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
<p><strong>பேருந்து நிழற்குடை இல்லாததால் வெயிலில் தவிக்கும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 29– கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மதியனூர் கிராமப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால், பள்ளி மாண வர்கள், பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் கடும் வெயிலிலும் மழையிலும் நின்று அவதிப்படும் நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. மதியனூர் கிராமத்திலிருந்து நகர்ப்பகுதிகளுக்குச் செல்ல பொது மக்கள் தினமும் பேருந்துகளையே நம்பி யுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை மற்றும் அலுவலக வேலைகளுக்குச் செல்லும் பொது மக்கள் அனைவரும் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுக் கோரிக்கை ஆனால், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்ந்து செல்வதற்கு நிழற்கூடம் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாகச் சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்களும், முதியவர்களும் வெயிலில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சிபிஎம் மற்றும் கிராம மக்கள் சார்பில் பலமுறை எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, மதியனூர் கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காகப் புதிய பேருந்து நிழற்கூடம் அமைத்துத் தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு பொதுமக்களின் இந்த அடிப்படை வசதியை உறுதி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.