முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை மல்லிகா கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு

5 Jul 2026, 1:45 am
உளுந்தூர்பேட்டை மல்லிகா கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு
<p><strong>உளுந்தூர்பேட்டை மல்லிகா கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 4 – கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திரு நாவலூர் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகா கிரா மத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் மற்றும் அதன் மின் இணைப்புகள் பழுதடைந்ததே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் குடிப்பது மற்றும் அன்றாடத் தேவைகளுக்காகத் தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தை கள் நீண்ட தூரம் நடந்து சென்று நீர் சேகரிக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். எனவே, சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனடி யாகத் தலையிட்டு, பழுதடைந்த மோட்டாரைச் சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram