தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிரந்தரப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 11:33 pm
நிரந்தரப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நிரந்தரப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நிரந்தரத் தன்மையுடைய பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் டெண்டர் முறையை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் அனைத்துப் பிரிவு ஒப்பந்தத் தொழி லாளர்களையும் பணிநிரந்தரம் செய்து, அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ. வீராசாமி, கௌரவத் தலை வர் கே. தங்கராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். செந்தில் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சாமிநாதன், எஸ். சேகர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தையல் கலைஞர் சங்கம் சார்பில் பி. ஸ்டாலின், வியாபாரிகள் சங்கம் சார்பில் பி. சேகர் மற்றும் என்.பழனியம்மாள், ஜி.சமையாள், எஸ்.மோகன்ராஜ், எஸ்.சதீஷ், எம். தமிழ்ச்செல்வன், எஸ். ஜானகிராமன், ஆர். முருகன் உள்ளிட்ட திரளான நிர்வாகி களும், நகராட்சித் தூய்மைப் பணியாளர்க ளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.