உளுந்தூர்பேட்டை அருகே கணையார் ஏரியில் 23 வீடுகள் அகற்றம்
18 Jul 2026, 12:02 am

உளுந்தூர்பேட்டை அருகே கணையார் ஏரியில் 23 வீடுகள் அகற்றம்

எதிர்ப்பு தெரிவித்தவர் மயங்கி விழுந்தார்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 17- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கணை யார் கிராம ஏரியில் இருந்த ஆக்கிரமிப்பு களை வருவாய்த்துறையினர் அதிரடியாக அகற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பாளர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்த னர். கணையார் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் ஒரு பகுதியை, கடந்த 50 ஆண்டு களாக 23 பேர் வீடுகள் கட்டியும், விவசாய நிலங்களாக மாற்றியும் பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த்துறை அதி காரிகள் செவ்வாயன்று காலை கணையார் கிராமத்திற்குச் சென்றனர். ஆக்கிர மிப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதற்கிடையில், சிலர் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஏரி நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வரப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.